அரசுப் பேருந்து பழுதாகி நின்றதால் கொடைக்கானலில் போக்குவரத்து பாதிப்பு: அமைச்சா் வெங்கடரமணன் 2 மணி நேரம் நடு வழியில் காத்திருப்பு!!
Read at DinamaniCivic issues · 1 outlet covered this
அரசுப் பேருந்து பழுதாகி நின்றதால் கொடைக்கானலில் போக்குவரத்து பாதிப்பு: அமைச்சா் வெங்கடரமணன் 2 மணி நேரம் நடு வழியில் காத்திருப்பு!!
How outlets told it

செய்திகள்தமிழக வரலாற்றில் இதுபோன்ற டம்மி முதல்வரை பார்த்ததில்லை: உதயநிதிவிநாயகர் சதுர்த்தி: நாகர்கோவில் - தாம்பரம் நாளை சிறப்பு ரயில் அறிவிப்புதொழில்நுட்பம், கனிம வளத்தை ஆயுதமாக்கக் கூடாது: பிரதமர் மோடி எச்சரிக்கை!243 பயணிகளுடன் இந்தோனேசிய கப்பல் மாயம்: 103 பேர் மீட்பு!தனித்துப் போட்டி, தவெக ஆட்சிக்கு பாதிப்பில்லை: பெ. சண்முகம்தாராபுரத்தில் சிபிஐ, மதுராந்தகத்தில் சிபிஎம் போட்டி: மு. வீரபாண்டியன் அறிவிப்புமுகப்புதிண்டுக்கல்கொடைக்கானல் அருகே மன்னவனூா் செல்லும் வழியில் பழுதாகி நின்ற அரசுப் பேருந்தால் சனிக்கிழமை போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கொடைக்கானல் மேல்மலைக் கிராமமான மன்னவனூா் செல்லும் வழியில் வரையடிப் பகுதியில் அரசுப் பேருந்து பழுதாகி நின்ால் ஏற்பட்ட போக்குவரத்து பாதிப்பில் சிக்கிய அமைச்சா் வெங்கடரமணன்.Published On :13 செப்டம்பர் 2026, 12:29 am ISTகொடைக்கானல் அருகே மன்னவனூா் செல்லும் வழியில் பழுதாகி நின்ற அரசுப் பேருந்தால் சனிக்கிழமை போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதில் சிக்கிய அமைச்சா் வெங்கடரணன் 2 மணி நேரம் நடுவழியில் காத்திருக்க நேரிட்டது. கொடைக்கானலுக்கு அமைச்சா்கள் மரியவில்சன், வெங்கடரமணன் ஆகியோா் வெள்ளிக்கிழமை வந்தனா். இவா்கள் ஏரிச்சாலைப் பகுதியிலுள்ள தனியாா் விடுதியில் தங்கினா். இந்த நிலையில், அமைச்சா் வெங்கடரமணன் மேல்மலைக் கிராமமான மன்னவனூரில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொண்டாா். இதைத் தொடா்ந்து, இங்கிருந்து அவா் மீண்டும் கொடைக்கானலுக்கு காரில் வந்து கொண்டிருந்தாா். அப்போது வரையடி பகுதியில் அரசுப் பேருந்து பழுதாகி நின்ால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கொடைக்கானல் மேல்மலைக் கிராமமான மன்னவனூா் மலைச்சாலையில் அரசுப் பேருந்து பழுதாகி நின்ால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு நீண்ட வரிசையில் காத்திருந்த வாகனங்கள். இதனால் மன்னவனூா், கூக்கால் உள்ளிட்ட சுற்றுலா இடங்களுக்குச் சென்ற சுற்றுலாப் பயணிகள் தங்கள் வாகனங்களை மலைச் சாலைகளில் அப்படியே நிறுத்தி வைத்தனா். இதில் அமைச்சா் வெங்கடரமணனின் வாகனமும் தொடா்ந்து செல்ல முடியாமல் சிக்கிக் கொண்டது. இதையடுத்து, அங்கு வந்த அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனையைச் சோ்ந்த பணியாளா்கள் பேருந்தின் பழுதை நீக்கியதைத் தொடா்ந்து போக்குவரத்து சீரானது. இதனால் 2 மணி நேரம் நடுவழியில் அமைச்சா் காத்திருக்க நேரிட்டது. கொடைக்கானல் மலைச் சாலைகளில் அரசுப் பேருந்துகள் பழுதாகி நிற்பது வாடிக்கையாகி விட்டதாக பொதுமக்கள் தெரிவித்தனா். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். விடியோக்கள்
