Politics · 1 outlet covered this

லண்டன் சென்றடைந்தார் முதல்வர் விஜய்! தமிழர்கள் உற்சாக வரவேற்பு!

How outlets told it

Dinamani653d ago

லண்டன் சென்றடைந்தார் முதல்வர் விஜய்! தமிழர்கள் உற்சாக வரவேற்பு!

Read at Dinamani
லண்டன் சென்றடைந்தார் முதல்வர் விஜய்! தமிழர்கள் உற்சாக வரவேற்பு!
Photo: Dinamani

செய்திகள்தமிழக வரலாற்றில் இதுபோன்ற டம்மி முதல்வரை பார்த்ததில்லை: உதயநிதிவிநாயகர் சதுர்த்தி: நாகர்கோவில் - தாம்பரம் நாளை சிறப்பு ரயில் அறிவிப்புதொழில்நுட்பம், கனிம வளத்தை ஆயுதமாக்கக் கூடாது: பிரதமர் மோடி எச்சரிக்கை!243 பயணிகளுடன் இந்தோனேசிய கப்பல் மாயம்: 103 பேர் மீட்பு!தனித்துப் போட்டி, தவெக ஆட்சிக்கு பாதிப்பில்லை: பெ. சண்முகம்தாராபுரத்தில் சிபிஐ, மதுராந்தகத்தில் சிபிஎம் போட்டி: மு. வீரபாண்டியன் அறிவிப்புமுகப்புதமிழ்நாடுலண்டன் சென்றடைந்தார் முதல்வர் விஜய்! தமிழர்கள் உற்சாக வரவேற்பு!முதல்வர் விஜய் லண்டன் சென்றடைந்தது பற்றி... சென்னை விமான நிலையத்தில் முதல்வர் விஜய் - CMOTamilnaduPublished On :11 செப்டம்பர் 2026, 12:05 pm ISTதமிழ்நாடு முதல்வர் ச. ஜோசப் விஜய் அரசுமுறைப் பயணமாக லண்டனுக்குச் சென்றடைந்தார். தமிழகத்துக்கு புதிய முதலீடுகளை ஈா்ப்பதற்காக, முதல்வா் ச. ஜோசப் விஜய் வியாழக்கிழமை (செப்.10) இரவு 10 மணியளவில் சென்னை விமான நிலையத்திலிருந்து லண்டன் புறப்பட்டுச் சென்றாா். துபை வழியாக லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்துக்கு இந்திய நேரப்படி இன்று காலை 11.30 மணியளவில் முதல்வர் விஜய் சென்றடைந்தார். ஹீத்ரோ விமான நிலையத்தில் கூடியிருந்த பிரிட்டன் வாழ் தமிழர்கள் முதல்வர் விஜய்க்கு பூங்கொத்து கொடுத்து ஆரவாரத்துடன் உற்சாக வரவேற்பு அளித்தனர். முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு அவா் மேற்கொள்ளும் முதல் அரசு முறைப்பயணம் இதுவாகும். 6 நாள்கள் தங்கியிருக்கும் அவா் தமிழகத்துக்கு முதலீடுகளை ஈா்ப்பது தொடா்பாக தொழிலதிபா்களுடன் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். புகழ்பெற்ற காா் பந்தய மைதானமான ‘சில்வா்ஸ்டோன் மோட்டாா் ரேசிங் சா்க்யூட்’-ஐயும் பாா்வையிட்டு, நடிகர் அஜித் குமார் பங்கேற்கும் கார் பந்தயத்தை தொடங்கிவைக்கவுள்ளார். முதல்வர் விஜய்யுடன் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மற்றும் மூத்த அரசு அதிகாரிகளும் பயணம் மேற்கொண்டுள்ளனர்.SummaryChief Minister Vijay has arrived in London - Enthusiastic welcome from Tamilsபின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். விடியோக்கள்