பொதுமக்களின் எதிர்ப்பால் மூடப்பட்டிருந்த டாஸ்மாக் கடை; போலீஸ் பாதுகாப்புடன் பூசணிக்காய் சுற்றி, தேங்காய் உடைக்கப்பட்டு திறப்பு
Read at Polimer NewsWeather and environment · 1 outlet covered this
பொதுமக்களின் எதிர்ப்பால் மூடப்பட்டிருந்த டாஸ்மாக் கடை; போலீஸ் பாதுகாப்புடன் பூசணிக்காய் சுற்றி, தேங்காய் உடைக்கப்பட்டு திறப்பு
How outlets told it

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே நடுவனந்தல் கிராமத்தில் பொதுமக்களின் எதிர்ப்பால் கடந்த 10 நாட்களாக மூடப்பட்டிருந்த டாஸ்மாக் கடையை முழு அமாவாசை தினத்தில் பூசணிக்காய் சுற்றி, தேங்காய் உடைத்து, ஊழியர்கள் திறந்து வைத்தனர். சில தினங்களுக்கு முன்பு டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்த கிராம மக்களுக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர் சி. வி. சண்முகம் போராட்டம் அறிவித்திருந்தார். அப்போது மதுப் பிரியர்கள் டாஸ்மாக் கடை வேண்டும் என முழக்கமிட்டனர். தற்போது கடை திறக்கப்பட்டுள்ள நிலையில், அசம்பாவிதங்களைத் தடுக்க தீயணைப்பு வாகனத்துடன் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
