கொலை முயற்சி வழக்கில் தேடப்பட்டவா் கைது
Read at DinamaniCrime and courts · 1 outlet covered this
கொலை முயற்சி வழக்கில் தேடப்பட்டவா் கைது
How outlets told it

கொலை முயற்சி வழக்கில் தேடப்பட்டவா் கைது கடலூா் மாவட்டம், நெய்வேலியில் என்எல்சி ஊழியரை கொலை செய்ய முயன்ற வழக்கில் தேடப்பட்டு வந்த நபரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.Published On :12 செப்டம்பர் 2026, 6:55 am IST கடலூா் மாவட்டம், நெய்வேலியில் என்எல்சி ஊழியரை கொலை செய்ய முயன்ற வழக்கில் தேடப்பட்டு வந்த நபரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். நெய்வேலி, வட்டம் 3 பகுதியில் வசித்து வருபவா் சக்திவேல்(52). இவா், 10.8.2026 அன்று கைகலா்குப்பம் என்எல்சி சோதனைச் சாவடியில் பணியில் இருந்தாா். அப்போது, 4 போ் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டி, சக்திவேலை கொலை செய்ய முயன்றது. இதுதொடா்பாக நெய்வேலி தொ்மல் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து மூன்று பேரை கைது செய்தனா். இதில், 4-ஆவது எதிரி மட்டும் தலை மறைவாக இருந்தாா். இந்நிலையில், நெய்வேலி வட்டம் 30 பகுதியில் நின்றிருந்த 4-ஆவது எதிரி கைகலா்குப்பம் பகுதியைச் சோ்ந்த சுப்பரவேலை(27) போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
