M.K. Stalin | “என்னை சந்தித்தபோது சொன்னதை மறந்துட்டீங்களா தம்பி விஜய்?” - மு.க. ஸ்டாலின் கேள்வி!
Read at News18 TamilPolitics · 1 outlet covered this
M.K. Stalin | “என்னை சந்தித்தபோது சொன்னதை மறந்துட்டீங்களா தம்பி விஜய்?” - மு.க. ஸ்டாலின் கேள்வி!
How outlets told it

Trending:சற்றுமுன்பட்ஜெட் தொடர்Disco With KSDid You KnowOTT SpotShort NewsI3 With KSFollow UsfacebooktwitterinstagramyoutubePublished by:Malaiarasu Mnews18-tamilLast Updated:Sep 10, 2026 7:59 AM ISTசர்க்காரியா கமிஷன் உண்மை என்றால் மத்திய அரசு நடவடிக்கை எடுத்திருக்கும் என முதலமைச்சர் விஜய் குற்றச்சாட்டுக்கு திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.1/6காவல்துறை மானியக் கோரிக்கையின் மீது பேசும்போது மிசா விவகாரத்தில் முன்னாள் முதல்வர் ஸ்டாலின் கைது குறித்து பேசிய முதலமைச்சர் விஜய் செய்த செய்கை விமர்சனத்துக்குள்ளானது. பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்துவருகிறார்கள். இந்த நிலையில் திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு. க. ஸ்டாலின் இது தொடர்பாக வீடியோ வெளியிட்டு முதலமைச்சர் விஜய்க்கு பதில் கொடுத்துள்ளார்.2/6அந்த வீடியோவில், “நீங்கள் கைவைத்து தாடையை காண்பித்தது Correctதான்; நான் அடி வாங்கிய தழும்புகள் இன்றைக்கும் எனக்கு இருக்கிறது. நான் இல்லை என்று சொல்லவில்லை. பொதுவாழ்க்கையில் இருப்பவர்களுக்கு, முக்கியமாக தமிழர்களுக்காக போராடும் நிறைய பேருக்கு இந்த மாதிரி அடக்குமுறை நடந்துள்ளது. போராளிகள் எல்லாம் இதை தாண்டிதான் வந்துள்ளோம்.3/6தம்பி விஜய், தமிழ்நாடு சட்டமன்றத்திற்கென மாண்பும் மரியாதையும் இருக்கிறது. பல பெரிய தலைவர்கள், மாமனிதர்கள் தமிழ்நாட்டை செதுக்கிய இடம். அந்த பொறுப்பு உங்களுக்கும் இருக்கிறது. தமிழ்நாட்டின் உரிமைகளை பாதுகாப்பது குறித்து அங்கே விவாதம் செய்யுங்கள். அதனை விட்டுவிட்டு தேவையில்லாத சர்ச்சைகளை சட்டமன்றத்தில் பேச வேண்டாம் என்பது தான் எனது கோரிக்கை.4/6நீங்கள் முதலமைச்சரானதும் என்னை சந்திக்க என் வீட்டிற்கு வந்தீர்கள். அப்போது உங்களின் கரம் பிடித்து உங்களை வரவேற்றேன். அப்போ நாம் பேசும்போது நீங்கள் என்னிடம் தேர்தல் பிரச்சாரத்தில் என்னை ரொம்ப விமர்சித்து பேசியதற்கு 'சாரி சார்' என்றீர்கள். அதுக்கு நான் 'பரவாயில்லை பிரதர், அதையெல்லாம் நான் மனதில் வைத்துக் கொள்ளவில்லை. நீங்க இப்போது ஒரு மாநிலத்தின் முதலமைச்சர். யாரை பற்றி பேசும்போதும் அந்த கண்ணியத்தோடு பேசுங்கள்' என்றேன்.5/6அதனையெல்லாம் நீங்க மறந்துவிட்டீர்கள் போல. திரும்பவும் சொல்கிறேன் ஒரு முதலமைச்சருக்கான கண்ணியத்தோடு உங்கள் வார்த்தைகளும் உடல்மொழியும் இருக்க வேண்டும். நாம் தான் மக்களுக்கு முன்னுதாரணம், அதை மறந்துவிடாதீர்கள். நீங்க வகிக்கின்ற பெரிய பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். சட்டசபையை ரீல்ஸ் எடுக்கும் இடமாக மாற்றியது, நாங்க கட்டிய பாலத்தின் மேல் நின்று போட்டோ ஷூட் எடுப்பது என ஆட்சி நிர்வாகத்தையும் சினிமா போல் நடத்துகிறீர்கள்.6/6உங்களின் திறனற்ற நிர்வாகத்தை மறைக்க ரீல்ஸ் போட்டு தலைமுறையை ஏமாற்றுகிறீர்கள். உங்க ஆட்சியில் தினம் தினம் கொலை, பாலியல் குற்றங்கள் சட்டம் ஒழுங்கு படுகுழியில் இருக்கிறது. பரந்தூர் திட்டத்தை ரத்து செய்து தமிழ்நாட்டின் வளர்ச்சியை 15 வருடம் பின்னுக்கு தள்ளியிருக்கிறீர்கள். தேர்தல் வாக்குறுதிகளை வாய் திறக்காமல் இருக்கிறார்கள்.” என்று மு. க. ஸ்டாலின் பதில் கொடுத்திருக்கிறார்.
