இடைத்தேர்தலில் மமதா போட்டியிட்டால் நாங்கள் வாபஸ்: திரிணமூல் அதிருப்தி அணி!
Read at DinamaniPolitics · 1 outlet covered this
இடைத்தேர்தலில் மமதா போட்டியிட்டால் நாங்கள் வாபஸ்: திரிணமூல் அதிருப்தி அணி!
How outlets told it

மேற்கு வங்கத்தில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் மமதா பானர்ஜி போட்டியிட்டால் எங்கள் அணியின் வேட்பாளர் வாபஸ் பெறுவார் என ரிதப்ரதா பானர்ஜி தெரிவித்தார். நடைபெற்று முடிந்த மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில், 15 ஆண்டுகள் மாநிலத்தை ஆட்சி செய்துவந்த மமதா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ், மொத்தமுள்ள 294 பேரவைத் தொகுதிகளில் 80 தொகுதிகளில் மட்டுமே வென்று பெருந்தோல்வியைச் சந்தித்தது. இதைத் தொடர்ந்து, மமதா பானர்ஜிக்கு எதிராக ரிதப்ரதா பானர்ஜி தலைமையில் திரிணமூல் அதிருப்தி அணி உருவாகியது. இதனால், திரிணமூல் காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவோடு, எதிர்க்கட்சித் தலைவராக ரிதப்ரதா பானர்ஜி இருந்து வருகிறார். இதையடுத்து, மேற்கு வங்கத்தின் நந்திகிராம் மற்றும் ரெஜிநகர் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 6 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என இந்தியத் தேர்தல் ஆணையம் அண்மையில் அறிவித்தது. இந்த நிலையில், மமதா பானர்ஜி நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்டு, வெற்றிபெற்று சட்டப்பேரவைக்குள் வர வேண்டும் என்றும் அவ்வாறு அவர் போட்டியிட்டால் எங்கள் அணியின் வேட்பாளர் அந்தத் தொகுதியில் வாபஸ் பெறுவார் என்றும் ரிதப்ரதா பானர்ஜி தெரிவித்தார். மமதா பானர்ஜிக்கும் ரிதப்ரதா பானர்ஜிக்கும் இடையே கட்சிப் பெயர், சின்னம் போன்ற விஷயங்களில் சர்ச்சை தொடர்ந்து வரும் நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
