Cinema and entertainment · 1 outlet covered this

ரசிகையுடன் கட்டியணைப்பு.. உடல்நிலை சரியில்லாதபோது மேடையேறிய நடிகை ஊர்வசி!

How outlets told it

Puthiya Thalaimurai1002d ago

ரசிகையுடன் கட்டியணைப்பு.. உடல்நிலை சரியில்லாதபோது மேடையேறிய நடிகை ஊர்வசி!

Read at Puthiya Thalaimurai
ரசிகையுடன் கட்டியணைப்பு.. உடல்நிலை சரியில்லாதபோது மேடையேறிய நடிகை ஊர்வசி!
Photo: Puthiya Thalaimurai

தமிழ், மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய திரையுலகில் நீண்டகாலமாக முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஊர்வசி. நகைச்சுவை, குணச்சித்திரம் என எந்தவிதமான கதாபாத்திரமாக இருந்தாலும் தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து விடுவார். நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக திரையுலகில் பயணித்து வரும் அவரின், ஒரு வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. ஊர்வசி, ஜோஜூ ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில் உருவாகியுள்ள படம் `ஆஷா'. செப்டம்பர் 11ஆம் தேதி வெளியாகும் இந்தப் படத்தின் புரமோஷன் நிகழ்வு நேற்று கேரளாவில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சிக்கு வந்த ஒரு ரசிகை, ஊர்வசி நடிக்கையில் அழுதால் நாங்களும் அழுதுவிடுவோம் என அழத் துவங்கிவிட்டார். அதைப் பார்த்த ஊர்வசி, அந்த ரசிகையை அழைத்து கட்டியணைத்து ஆறுதல் கூறினார். இதற்கு பிறகு நிகழ்ச்சி முடிந்த பின்னர் உடல்நிலை சரி இல்லாததால், மேடையில் இருந்து இறங்க முடியாமல் தயங்கிய ஊர்வசியை கைத்தாங்கலாக பிடித்து இறங்க வைத்தனர் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் நடிகர் ஜோஜூ ஜார்ஜ். அப்போது அவர் கண்ணாடி நழுவி விழ, அதனைச் சரி செய்தபடி இறங்கினார் ஊர்வசி. இந்த வீடியோவைப் பலரும் பகிர்ந்து உடல்நிலை சரி இல்லாத போதும்கூட, படத்தின் புரமோஷன் நிகழ்வில் கலந்துகொண்ட ஊர்வசியின் அர்ப்பணிப்பைப் பாராட்டி வருகின்றனர்.