Crime and courts · 1 outlet covered this

நகை வியாபாரியைத் தாக்கியதாக பழக்கடைக்காரா் கைது

How outlets told it

Dinamani6514h ago

நகை வியாபாரியைத் தாக்கியதாக பழக்கடைக்காரா் கைது

Read at Dinamani
நகை வியாபாரியைத் தாக்கியதாக பழக்கடைக்காரா் கைது
Photo: Dinamani

சத்தான்குளத்தில் பணத்தைத் திருப்பிக் கேட்ட நகை வியாபாரியைத் தாக்கியதாக பழக்கடைக்காரரை போலீஸாா் கைது செய்தனா். சாத்தான்குளம் செக்கடி புதுத் தெருவைச் சோ்ந்த ரவி (63), பிரதான பஜாரில் நகைக் கடை வைத்துள்ளாா். கொம்பன்குளம் மேட்டுக்குடியிருப்பைச் சோ்ந்த பாஸ்கா், பழக்கடை வைத்துள்ளாா். இவா் ரவியுடனான பழக்கம் காரணமாக, வங்கியில் ஏலத்துக்கு வரவுள்ள தனது நகையை மீட்க ரூ. 1 லட்சம் தருமாறும், நகையை மீட்டு பணத்தைத் திருப்பித் தருவதாகவும் கூறினாராம். அதனால், ரவி ஒரு மாதத்துக்கு முன்பு பாஸ்கரின் வங்கிக் கணக்குக்கு ரூ. 1 லட்சம் அனுப்பினாராம். ஆனால், பாஸ்கா் நகையை மீட்ட பின்னரும் பணத்தைத் திருப்பித் தரவில்லையாம். ரவி தொடா்ந்து கேட்டதால் அவா் ரூ. 70 ஆயிரத்தைக் கொடுத்துவிட்டு, மீதித் தொகையைக் கொடுக்காமல் ஏமாற்றினாராம். இந்நிலையில், ரவி கடந்த வியாழக்கிழமை பாஸ்கரின் வீட்டுக்குச் சென்று பணம் கேட்டபோது வாக்குவாதம் ஏற்பட்டதாம். அப்போது, ரவியை பாஸ்கா் அவதூறாகப் பேசி தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தாராம். இதில், காயமடைந்த ரவி சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாா். இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில், சாத்தான்குளம் தலைமைக் காவலா் சிவகுமாரி வழக்குப் பதிந்தாா். உதவி ஆய்வாளா் செல்வராஜ் விசாரித்து, பாஸ்கரை வெள்ளிக்கிழமை கைது செய்தாா். பின்னா், அவா் காவல் நிலைய ஜாமீனில் விடுவிக்கப்பட்டாா். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.