Cinema and entertainment · 1 outlet covered this

துருவ் படத்தின் டைட்டில் வெளியீடு!

How outlets told it

துருவ் படத்தின் டைட்டில் வெளியீடு!
Photo: Dinamani

மைத்ரி நிறுவனம் தயாரிப்பில் துருவ் விக்ரம் நடிக்கும் படத்தின் டைட்டில் இன்று வெளியானது.

துருவ் விக்ரம், பைசன் படத்தின் மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு அறிமுக இயக்குநர் கரண் அரவிந்த் குமார் இயக்கத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் நடிகர்கள் பிருத்விராஜ், சாய் தீனா உள்ளிட்டோரும் நடிப்பதாகக் கூறப்படுகிறது.

இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

ரொமாண்டிக் - ஆக்‌ஷன் திரைப்படமாக உருவாகி வரும் இத்திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு ஜாக்கி எனப் பெயரிட்டுள்ளனர்.

துருவ் தந்தை விக்ரமின் அடுத்தப் பட டைட்டில் அறிவிப்பு நாளை வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Title of the film starring Dhruv revealed.

சியான் - 63 படத்தின் புதிய அப்டேட்!