Religion and culture · 1 outlet covered this

மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்... செப்.17ல் மாட்டுத்தாவணி காய்கறி சந்தைக்கும் விடுமுறை

How outlets told it

News18 Tamil655h ago

மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்... செப்.17ல் மாட்டுத்தாவணி காய்கறி சந்தைக்கும் விடுமுறை

Read at News18 Tamil
மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்... செப்.17ல் மாட்டுத்தாவணி காய்கறி சந்தைக்கும் விடுமுறை
Photo: News18 Tamil

Trending:சற்றுமுன்Disco With KSDid You KnowOTT SpotDecodeShort NewsI3 With KSFollow UsfacebooktwitterinstagramyoutubeReported by:YuvathikaPublished by:pradeepa mLast Updated:Sep 14, 2026 10:26 AM ISTமதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை காண மதுரை மாநகரம் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் அதிகளவில் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 1/5மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் மகா கும்பாபிஷேகப் பெருவிழா வரும் செப்டம்பர் 17-ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி மதுரை மாவட்டம் முழுவதும் அன்றைய தினம் உள்ளூர் விடுமுறை அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் உள்ளிட்டவற்றுக்கு இந்த விடுமுறை பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.2/5கும்பாபிஷேகத்தை காண மதுரை மாநகரம் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் அதிகளவில் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மதுரை நகரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும், பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் பயணத்திற்கு இடையூறு ஏற்படாமல் இருக்கவும் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.3/5இந்த நிலையில், மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் செயல்பட்டு வரும் காய்கறி மொத்த விற்பனை சந்தைக்கும் செப்டம்பர் 17-ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கும்பாபிஷேக நாளில் அதிகளவில் வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் மதுரை நகருக்குள் வரக்கூடிய சூழல் இருப்பதால், போக்குவரத்து சிரமத்தை தவிர்க்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.4/5மாட்டுத்தாவணி காய்கறி சந்தைக்கு வரும் சரக்கு வாகனங்கள், வியாபாரிகள் மற்றும் பொதுமக்களின் வாகனப் போக்குவரத்தையும் கருத்தில் கொண்டு இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கும்பாபிஷேக நாளில் மதுரை நகரின் முக்கிய சாலைகளில் ஏற்படக்கூடிய கூடுதல் வாகன நெரிசலை குறைக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.5/5செப்டம்பர் 17-ம் தேதி கும்பாபிஷேக நிகழ்வை முன்னிட்டு மதுரை நகரில் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறையும், மாட்டுத்தாவணி காய்கறி சந்தைக்கு தனியாக விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக செப்டம்பர் 26-ம் தேதி மதுரை மாவட்டத்தில் முழு பணிநாளாக செயல்படும் எனவும் அரசு அறிவித்துள்ளது.