Sports · 1 outlet covered this

பெண்கள் ஆசிய கோப்பை இறுதிப்போட்டி: இந்தியா - இலங்கை இன்று மோதல்

How outlets told it

Daily Thanthi9926h ago

பெண்கள் ஆசிய கோப்பை இறுதிப்போட்டி: இந்தியா - இலங்கை இன்று மோதல்

Read at Daily Thanthi
பெண்கள் ஆசிய கோப்பை இறுதிப்போட்டி: இந்தியா - இலங்கை இன்று மோதல்
Photo: Daily Thanthi

துபாய்,

பெண்கள் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் இறுதிப்போட்டில் இந்தியா, இலங்கை இன்று மோதுகின்றன

பெண்கள் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட்

10வது பெண்கள் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் கடந்த மாதம் 28ம் தேதி தொடங்கியது.

இத்தொடரில் குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், தாய்லாந்து, ஹாங்காங் மற்றும் குரூப் பி பிரிவில் இலங்கை, வங்காளதேசம், ஐக்கிய அரபு அமீரகம், இந்தோனேசியா என மொத்தம் 8 அணிகள் இடம்பெற்றன.

இதில் குரூப் ஏ பிரிவில் முதல் இந்தியா, பாகிஸ்தானும், குரூப் பி பிரிவில் இலங்கை, வங்காளதேசமும் அரையிறுதிக்கு முன்னேறின.

இதில் முதல் அரையிறுதி போட்டியில் வங்காளதேசத்தை வீழ்த்தி இந்தியா இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. அதேபோல், 2வது அரையிறுதி போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கை இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இந்தியா - இலங்கை மோதல்

இந்நிலையில், பெண்கள் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா, இலங்கை அணிகள் மோதுகின்றன. துபாயில் உள்ள துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று இரவு 8 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது.

நடப்பு சாம்பியன் ஆன இலங்கை பெண்கள் ஆசிய கோப்பையை தக்க வைக்க தீவிரம் காட்டும். அதேவேளை, 7 முறை ஆசிய கோப்பையை வென்றுள்ள இந்தியா 8வது முறையாக கோப்பையை வெல்ல போராடும் என்பதால் இன்றைய போட்டியில் பஞ்சம் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.