Business · 1 outlet covered this

Gold Price | 2050-ல் தங்கம் விலை இதுதான்; ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் எவ்வளவு கிடைக்கும்?

How outlets told it

News18 Tamil654d ago

Gold Price | 2050-ல் தங்கம் விலை இதுதான்; ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் எவ்வளவு கிடைக்கும்?

Read at News18 Tamil
Gold Price | 2050-ல் தங்கம் விலை இதுதான்; ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் எவ்வளவு கிடைக்கும்?
Photo: News18 Tamil

Trending:சற்றுமுன்பட்ஜெட் தொடர்Disco With KSDid You KnowOTT SpotShort NewsI3 With KSFollow UsfacebooktwitterinstagramyoutubePublished by:Soundarya Kannannews18-tamilLast Updated:Sep 10, 2026 8:04 AM ISTGold Price Prediction | நீண்ட கால அடிப்படையில் ஒருவர் தங்கத்தில் முதலீடு செய்ய வேண்டுமானால் என்ன செய்யலாம்?, இன்று நாம் முதலீடு செய்யும் தங்கத்தின் மதிப்பு 2050ம் ஆண்டில் எவ்வளவு உயரும்? என்று தற்போது பார்ப்போம்.1/7பொதுவாக, இந்தியாவில் தங்கம் மங்களகரமானதாகப் பார்க்கப்படுகிறது. திருமணம், பண்டிகை, விழாக்களில் பரிசுப் பொருட்களாகவும் தங்கம் வழங்கப்படுகிறது. மேலும், மக்களிடையே பாதுகாப்பான சேமிப்பாகவும் தங்கம் கருதப்படுகிறது. இந்த நிலையில், தற்போது தங்கம் விலை சற்று ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இதற்கிடையே, பண்டிகைக் காலமும் நெருங்கிவிட்டது. இதனால் தங்கம் விலை உயருமா அல்லது குறையுமா என்ற கேள்வி மக்களிடையே எழுந்துள்ளது. இந்த நிலையில், நீண்ட கால அடிப்படையில் ஒருவர் தங்கத்தில் முதலீடு செய்ய வேண்டுமானால் என்ன செய்யலாம்? இன்று நாம் முதலீடு செய்யும் தங்கத்தின் மதிப்பு 2050ஆம் ஆண்டில் எவ்வளவு உயரும்? என்று தற்போது பார்ப்போம்.2/7தங்கம் விலை கடந்த ஆகஸ்ட் மாதம் மட்டும் 8.41 சதவீதம் உயர்ந்தாலும், செப்டம்பர் மாதம் யாரும் எதிர்பார்க்காத வகையில் 0.32 சதவீதமாகக் குறைந்துள்ளது. இந்த நிலையில், தங்கத்தில் இன்று 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் 2050ல் இதன் மதிப்பு எவ்வளவு இருக்கும்? முதலில் ஒரு சொத்து நீண்டகால அடிப்படையில் அதன் மதிப்பீட்டை தக்கவைக்கும் அளவுக்கான திறன் கொண்டு உள்ளதா? என்பதன் அடிப்படையிலேயே அதன் மீது நீண்ட கால முதலீட்டை செய்ய முடியும்.3/7பொதுவாக, ஒரு பொருளின் பயன்பாடு, சப்ளை, டிமாண்ட் ஆகியவற்றின் அடிப்படையில் தான் அதன் மதிப்பு உயரும் அல்லது குறையும். இந்த நிலையில், உலக நாடுகள் தங்கத்தை முக்கிய மற்றும் பாதுகாப்பான சொத்தாக தொடர்ந்து நம்புவதால் அமெரிக்கா, பிரிட்டன் நாடுகளில் இருக்கும் தங்கத்தைத் தாய் நாட்டிற்குக் கொண்டு வரத் தொடங்கியுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.4/7இதன் அடிப்படையில் பார்க்கும் போது தற்போதைய சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் 24 கேரட் தங்கம் விலை 4,403.38 டாலராக இருக்கும் வேளையில், சீனா, ரஷ்யா, இந்தியா மற்றும் இதர உலக நாடுகளின் தங்கம் நுகர்வு தொடரும் பட்சத்தில் 2030க்குள் தங்கம் விலை 10000 டாலரை எட்டும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது.5/7இதற்கிடையே, கடந்த 10 ஆண்டுகளில் தங்கத்தின் விலை எவ்வளவு அதிகரித்துள்ளது என்பதை நாம் கவனிக்க வேண்டும். 2016-ஆம் ஆண்டில், 10 கிராம் 24-காரட் தங்கத்தின் சராசரி விலை சுமார் ரூ.28,000 முதல் ரூ.30,000 வரை இருந்தது. அதுவே, 2026-ஆம் ஆண்டில் அந்த விலை சுமார் ரூ.1,53,250-ஆக உயர்ந்தது. செப்டம்பர் 7-ஆம் தேதியன்று இருந்த விலையின்படி, ரூ. 50,000-க்கு சுமார் 3.26 கிராம் தங்கத்தை வாங்க முடிந்தது. இதன் பொருள், 10 ஆண்டுகளில் தங்கத்தின் விலை சுமார் 5.35 மடங்கு அதிகரித்துள்ளது என்பதாகும். இது கூட்டு ஆண்டு வளர்ச்சி விகிதத்தின் (CAGR) அடிப்படையில் சுமார் 18.6% ஆகும். உலக தங்க கவுன்சிலின் (World Gold Council) தரவுகளின்படி, 2025-ஆம் ஆண்டிலும் தங்கம் 60%-க்கும் அதிகமான வருவாயை அளித்துள்ளது.6/7ஆனால், இதில் ஒரு முக்கியமான விஷயம் உள்ளது. கடந்த பத்தாண்டுகளில் தங்கம் ஆண்டுக்கு 18.6% வருவாயை அளித்துள்ளது என்பதற்காக, அடுத்த 10 ஆண்டுகளிலும் அதே அளவு வருவாய் கிடைக்கும் என்று கருத முடியாது. ஒருவேளை அதே செயல்பாடு தொடர்ந்தால், 50,000 ரூபாய் முதலீடு 2036-ஆம் ஆண்டிற்குள் சுமார் 2.75 லட்சம் ரூபாயாக மாறக்கூடும். அதாவது, சுமார் 2.25 லட்சம் ரூபாய் லாபம் கிடைக்கும். இருப்பினும், இது கடந்த கால வருவாயை அடிப்படையாகக் கொண்ட ஒரு கணிதக் கணக்கீடு மட்டுமே தவிர, உறுதியான வருவாய் அல்ல. சந்தை மற்றும் பொருளாதாரச் சூழலைப் பொறுத்து தங்கத்தின் விலையில் முற்றிலும் மாறுபட்ட மாற்றங்கள் ஏற்படலாம்.7/72050ல் 15000 முதல் 20000 டாலர் வரையில் உயரும் என்று பல்வேறு முதலீட்டு ஆய்வாளர்கள் மற்றும் அமைப்புகள் கணித்துள்ளது. இது தற்போதைய 4,403.38 டாலரை காட்டிலும் 5 முதல் 6 மடங்கு ஆகும். அப்படியானால் இன்று தங்கத்தில் செய்யப்படும் 1 லட்சம் ரூபாய் பணத்தை 24 கேரட் தங்கத்தில் முதலீடு செய்தால், CAGR அடிப்படையில் வருடத்திற்கு 10 சதவீதம் மட்டுமே வளர்ச்சி அடைந்தாலும் 1 லட்சம் ரூபாய் முதலீடு 14 முதல் 15 லட்சமாக உயரும். இதேபோல், 12 சதவீதமாக உயர்ந்தால் 22 லட்சமாக உயரும்.