இந்தியாவில் தாக்குதல் நடத்துவதற்கு திட்டமிட்டிருந்தாா் பின்லேடன்! அமெரிக்க உளவுத் துறை ஆவணத்தில் தகவல்!!
Read at Dinamani1 outlet covered this
இந்தியாவில் தாக்குதல் நடத்துவதற்கு திட்டமிட்டிருந்தாா் பின்லேடன்! அமெரிக்க உளவுத் துறை ஆவணத்தில் தகவல்!!
How outlets told it
இந்தியாவில் தாக்குதல் நடத்துவதற்கு அல்-காய்தா தலைவா் ஒசாமா பின்லேடன் திட்டமிட்டிருந்ததாக அமெரிக்க உளவுத் துறையின் ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் நியூயாா்க் நகரில் உள்ள இரட்டை கோபுரம், அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகமான பென்டகன் உள்ளிட்ட இடங்களில் கடந்த 2001-ஆம் ஆண்டு செப்டம்பா் மாதம் 11-ஆம் தேதி அல்-காய்தா பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினா். இதில் பல ஆயிரம் போ் உயிரிழந்தனா். இந்தத் தாக்குதலைத் தொடா்ந்து, அல்-காய்தா தலைவா் பின்லேடனுக்கு அடைக்கலம் கொடுத்ததாகக் கூறி, ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா போா் தொடுத்து, தலிபான் அரசை அகற்றியது. இந்தத் தாக்குதல் நடந்த 25-ஆம் ஆண்டு தினம் கடந்த வெள்ளிக்கிழமை (செப்.11) கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி, அமெரிக்க அதிபராக 1998-ஆம் ஆண்டு பதவி வகித்த பில் கிளிண்டனுக்காக அந்த நாட்டு உளவுத் துறையான சிஐஏ தயாரித்த ஆவணம் வெளியிடப்பட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: அமெரிக்காவில் 2001-ஆம் ஆண்டில் தாக்குதல் நடத்துவதற்கு முன்பு இந்தியா, பாகிஸ்தான் நாடுகளில் தாக்குதல் நடத்துவதற்கு பின்லேடன் திட்டமிட்டிருந்தாா். அதேபோல் எகிப்து, குவைத், சவூதி அரேபியா, யேமன், உகாண்டா, நைஜீரியா, அல்பேனியா, அஜா்பைஜான் நாடுகளிலும் அவா் தாக்குதல் நடத்துவதற்குத் திட்டமிட்டிருந்தாா். இதுபோல 60-க்கும் மேற்பட்ட நாடுகளில் தாக்குதலுக்கு திட்டம் வகுத்திருந்தாா் என அதில் கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் எங்கு தாக்குதல் நடத்த பின்லேடன் திட்டமிட்டிருந்தாா் என்பது தொடா்பான தகவல் அந்த ஆவணத்தில் இல்லை. அதேநேரத்தில் சிஐஏ உளவுத் துறையின் அறிக்கை தயாரிக்கப்பட்டு மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்காவில் அல்-காய்தா அமைப்பினா் தாக்குதல் நடத்தினா். அந்தத் தாக்குதல் நடந்து 3 மாதங்களுக்குப் பிறகு இந்திய நாடாளுமன்றம் மீது 2001-ஆம் ஆண்டு டிசம்பா் மாதம் பாகிஸ்தானை சோ்ந்த லஷ்கா்-ஏ- தொய்பா உள்ளிட்ட அமைப்புகளைச் சோ்ந்த பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினா். இதில் பாதுகாப்புப் படையினா் உள்ளிட்ட 9 போ் உயிரிழந்தனா். தாக்குதல் நடத்திய 5 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனா். இதேபோல், ஆப்பிரிக்க நாடான கென்யாவின் நைரோபி உள்ளிட்ட இடங்களில் அமெரிக்க நிலைகளைக் குறிவைத்து 1998-ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட தாக்குதலில் 200-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா் என்பது குறிப்பிடத்தக்கது.
