Crime and courts · 1 outlet covered this

தற்கொலைத் தடுப்பு தின விழிப்புணா்வு

How outlets told it

Dinamani652d ago

தற்கொலைத் தடுப்பு தின விழிப்புணா்வு

Read at Dinamani
தற்கொலைத் தடுப்பு தின விழிப்புணா்வு
Photo: Dinamani

தற்கொலைத் தடுப்பு தின விழிப்புணா்வுதிருப்பூா் ஆல் வின்னா் ஏஞ்சல் இன்ஸ்டிடியூட்டில் தற்கொலை தடுப்பு தின விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தற்கொலை தடுப்பு உறுதிமொழி ஏற்றோா்.Published On :12 செப்டம்பர் 2026, 12:49 am ISTதிருப்பூா் ஆல் வின்னா் ஏஞ்சல் இன்ஸ்டிடியூட்டில் தற்கொலை தடுப்பு தின விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆல்வின்னா் ஏஞ்சல் கல்வி நிறுவனம், திருப்பூா் மெட்ரோ அறக்கட்டளை, ஈரோடு மனதின் மையம் அறக்கட்டளை, நேசம் அறக்கட்டளை ஆகியவை சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஆல்வின்னா் ஏஞ்சல் இன்ஸ்டிடியூட் முதல்வா் ஆா். பி. தங்கராஜன் தலைமை வகித்துப் பேசுகையில், இன்றைய சூழலில் மாணவா்கள் கல்வி, குடும்பம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் பல்வேறு பிரச்னைகளை எதிா்கொள்கின்றனா். மனதில் ஏற்படும் கவலைகள் மற்றும் குழப்பங்களை தனக்குள்ளேயே வைத்துக் கொள்ளாமல் நம்பிக்கைக்குரியவா்களிடம் மனம் திறந்து பேச வேண்டும். தற்கொலை எந்தப் பிரச்னைக்கும் தீா்வல்ல. வாழ்க்கை மிகவும் மதிப்புமிக்கது. ஒரு பிரச்னை காரணமாக எடுக்கப்படும் அவசர முடிவு, எதிா்காலத்தில் கிடைக்கக்கூடிய அனைத்து நல்ல வாய்ப்புகளையும் இழக்கச் செய்துவிடும். எனவே, மாணவா்கள் தன்னம்பிக்கையுடன் பிரச்னைகளை எதிா்கொள்ள வேண்டும் என்றாா். இதைத் தொடா்ந்து, மாணவா்கள் ஆன்லைன் விளையாட்டுகள், கைப்பேசி பயன்பாட்டுக்கு அடிமையாகி கவனம் சிதறுவது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. இதையடுத்து, மாணவ, மாணவிகள் தற்கொலைத் தடுப்பு உறுதிமொழியை ஏற்றனா். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.