Crime and courts · 1 outlet covered this

யூடியூபர் சவுக்கு சங்கர் மீண்டும் கைது

How outlets told it

யூடியூபர் சவுக்கு சங்கர் மீண்டும் கைது
Photo: Daily Thanthi

Published on: 08 Apr 2026, 3:05 pmபிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் மோசடி வழக்குகளில் மீண்டும் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டார். இருப்பினும், அவரது தாயார் தொடர்ந்த வழக்கில் அவருக்கு மருத்துவ காரணங்களுக்கு நிபந்தனை ஜாமீனை வழங்கப்பட்டது. அத்துடன், வழக்கு தொடர்பாக பேட்டி அளிக்கக் கூடாது எனவும், வழக்கில் தொடர்புடைய நபர்களை சந்திக்கக் கூடாது எனவும் நிபந்தனை விதிக்கப்பட்டது. எனினும் சவுக்கு சங்கர் ஜாமீன் நிபந்தனைகளை மீறுவதாக போலீஸ் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. இதற்கிடையே, அவரது இடைக்கால ஜாமீன் முடிந்த நிலையில், சவுக்கு சங்கர் சரண் அடைய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. ஆனால், சவுக்கு சங்கர் தலைமறைவு ஆனதோடு தொடர்ந்து வீடியோக்களை பதிவிட்டு வந்தார். அவரை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில், ஆந்திராவில் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். நீதிமன்ற ஆணையை மதிக்காமல் முடிந்தால் கைது செய்யுங்கள் என போலீஸுக்கு சவால் விட்டதாக சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார் ஆந்திராவில் உள்ள ஒரு விடுதியில் வைத்து சென்னை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். தற்போது அவரைப் போலீசார் சென்னைக்கு அழைத்து வந்து கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.