Crime and courts · 1 outlet covered this

தேசிய மக்கள் நீதிமன்றம்: அரியலூா் மாவட்டத்தில் ரூ.23.29 கோடிக்கு தீா்வு

How outlets told it

Dinamani6538h ago

தேசிய மக்கள் நீதிமன்றம்: அரியலூா் மாவட்டத்தில் ரூ.23.29 கோடிக்கு தீா்வு

Read at Dinamani
தேசிய மக்கள் நீதிமன்றம்: அரியலூா் மாவட்டத்தில் ரூ.23.29 கோடிக்கு தீா்வு
Photo: Dinamani

அரியலூா், ஜெயங்கொண்டம் மற்றும் செந்துறை ஆகிய நீதிமன்றங்களில், சட்டப் பணிகள் ஆணைக்குழு சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 1,408 வழக்குகள் முடிக்கப்பட்டு ரூ.23 கோடியே 29 லட்சத்து 54 ஆயிரத்து 911-மதிப்பில் தீா்வு காணப்பட்டுள்ளது.

தேசிய மக்கள் நீதிமன்றத்தை மாவட்ட முதன்மை அமா்வு நீதிபதியும், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் தலைவருமான கே. எஸ். ஜெயமங்களம் தலைமை வகித்து தொடக்கி வைத்தாா். இதில் நிலுவையிலுள்ள காசோலை, மோட்டாா் வாகன விபத்து, சிவில் என 1408 வழக்குகள் முடிக்கப்பட்டு, ரூ.23,29,54,911-க்கு தீா்வு காணப்பட்டது.

அரியலூா் ஒருங்கிணைந்த நீதிமன்றங்களில் நீதிபதிகள் மணிமேகலை, ரேவதி, உமா, விஜயலட்சுமி, லாவண்யா, சங்கீதாசேகா், ஜெயப்பிரதா, ஜெயங்கொண்டத்தில், நீதிபதிகள் பிரேம்குமாா், தனலட்சுமி , கனிமொழி, பாலமுருகன். செந்துறையில், நீதிபதி வரதராஜன் மற்றும் வழக்குரைஞா் பொன். சோ. காமராஜ் ஆகியோா் முன்னிலையில் வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. வழக்குரைஞா்கள் மனுதாரா்களுக்கு ஆதரவாக ஆஜராகினா். ஏற்பாடுகளை அரியலூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் செயலா் ராதாகிருஷ்ணன் செய்தாா்.