Sports · 1 outlet covered this

6700 KM தூரம் பயணித்துவந்த PAK வீரர்.. இரண்டு இன்னிங்ஸிலும் 0 அவுட்! விமர்சிக்கும் நெட்டிசன்கள்!

How outlets told it

Puthiya Thalaimurai1002d ago

6700 KM தூரம் பயணித்துவந்த PAK வீரர்.. இரண்டு இன்னிங்ஸிலும் 0 அவுட்! விமர்சிக்கும் நெட்டிசன்கள்!

Read at Puthiya Thalaimurai
6700 KM தூரம் பயணித்துவந்த PAK வீரர்.. இரண்டு இன்னிங்ஸிலும் 0 அவுட்! விமர்சிக்கும் நெட்டிசன்கள்!
Photo: Puthiya Thalaimurai

Summaryஇங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் தொடரை ஏற்கனவே இழந்த பாகிஸ்தான், செனா நாடுகளில் 8 ஆண்டுகளாக டெஸ்ட் வெற்றியில்லாமல் தவிக்கிறது. இதனால் 7 வீரர்கள், டெஸ்ட் பயிற்சியாளர் சர்பராஸ் அகமது உட்பட, நடுத்தர தொடரிலேயே நாடு திரும்ப அழைக்கப்பட்டனர். மாற்று வீரர்கள் வந்தும், 3வது டெஸ்ட்டில் 133 ரன்களில் சுருண்ட பாகிஸ்தான் மீண்டும் தோல்வி நிழலில் தத்தளிக்கிறது. இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. முதலிரண்டு போட்டிகளிலும் படுதோல்வியை சந்தித்த அந்த அணி, தொடரையும் இழந்தது. ஒரு இன்னிங்ஸில் கூட அவர்களால் 200 ரன்களுக்கு மேல் அடிக்க முடியவில்லை.8 ஆண்டுகளாக செனா நாடுகளில் ஒரு டெஸ்ட் போட்டியை கூட வெல்லமுடியாத நிலையில், விரக்தியடைந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் டெஸ்ட் பயிற்சியாளர் சர்பராஸ் அகமது உட்பட 7 வீரர்களை நாட்டிற்கு பாதி தொடரிலேயே திரும்ப அழைத்து அதிரடி காட்டியது. அவர்களுக்கு பதிலாக மாற்று வீரர்கள் சேர்க்கப்பட்டனர். ஆனால் சோகம் என்னவென்றால் மாற்று வீரர்கள் களமிறக்கப்பட்டபோதும் அவர்களால் 3வது டெஸ்ட்டிலும் வெற்றிபெற முடியாத சூழலே இருந்துவருகிறது. முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி 133 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளது. கரீபியன் லீக் சதமடித்த சயிம் ஆயுபை பாகிஸ்தான் வரவழைத்த நிலையில், 6700 கிமீ கடந்துவந்த அவர் 3வது டெஸ்ட்டின் இரண்டு இன்னிங்ஸிலும் 0 ரன்னுக்கு அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார். ‘இதுக்கு பருத்திமூட்ட குடோன்லயே இருந்திருக்கலாம்’ என்ற வசனத்திற்கு ஏற்ப அவரை அணியில் சேர்க்காமலே இருந்திருக்கலாம் என்ற நிலை உருவாகியுள்ளது. இந்தசூழலில் தான் சயிம் ஆயுபை சேர்த்ததற்கு இங்கிலாந்து முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் மற்றும் நெட்டிசன்கள் அனைவரும் பாகிஸ்தான் வாரியத்தை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.