சற்று உயர்ந்த தங்கம் விலை.! இன்றைய நிலவரம் என்ன.?
Read at Daily ThanthiBusiness · 1 outlet covered this
சற்று உயர்ந்த தங்கம் விலை.! இன்றைய நிலவரம் என்ன.?
How outlets told it

சென்னை, சென்னையில் ஆபரணத்தங்கம் விலை இன்று சற்று அதிகரித்துள்ளது. தங்கம் விலைகடந்த சில தினங்களாக ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வந்த தங்கம் விலை, நேற்று முன்தினம் சவரனுக்கு ரூ.880 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.1,14,040க்கும், கிராமுக்கு ரூ.110 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,255க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதற்கிடையே தங்கம் விலை நேற்று காலையில் ஒரேயடியாக சவரனுக்கு ரூ.1,920 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,12,112க்கும், கிராமுக்கு ரூ.240 குறைந்து ஒரு கிராம் ரூ.14,015க்கும் விற்பனை செய்யப்பட்டது. காலையில் அதிரடியாக குறைந்த தங்கத்தின் விலை மாலையில் சவரனுக்கு ரூ.1,120 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,13,240க்கும், ஒரு கிராமுக்கு ரூ.140 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,145க்கும் விற்பனை செய்யப்பட்டது.
