Cinema and entertainment · 1 outlet covered this

கார்த்தியை ஓரங்கட்டிய சூரி.. 2 மடங்கு அதிக வசூல்! - சர்தார் 2 vs மண்டாடி

How outlets told it

கார்த்தியை ஓரங்கட்டிய சூரி.. 2 மடங்கு அதிக வசூல்! - சர்தார் 2 vs மண்டாடி
Photo: Puthiya Thalaimurai

Published on: 12 Sep 2026, 2:32 pmSummaryகார்த்தியின் சர்தார் 2, பெரிய பட்ஜெட்டும் ஹைப்பும் இருந்தும் கலவையான விமர்சனங்களால் வசூலில் பின்னடைவு கண்டுள்ளது. நீண்ட ஓட்ட நேரம், இரண்டாம் பாதி சலிப்பு போன்ற குறைகள் ரசிகர்களை ஏமாற்றியுள்ளன. இதே நேரத்தில் விறுவிறுப்பான திரைக்கதை, குடும்பம் முழுக்க ரசிக்கும் மேக்கிங் ஆகிய காரணங்களால் சூரியின் மண்டாடி மூன்றாம் நாளில் சர்தார் 2-ஐ விட 2 மடங்கு அதிக வசூல் பெற்று பாக்ஸ் ஆஃபிஸில் முன்னிலை பிடித்துள்ளது. கடந்த 10ஆம் தேதி கார்த்தியின் 'சர்தார் 2' மற்றும் சூரியின் 'மண்டாடி' திரைப்படங்கள் ஒரே நாளில் திரையரங்குகளில் வெளிவந்தன. கடந்த 2022ஆம் ஆண்டு ஸ்பை-த்ரில்லர் திரைப்படமாக வெளியாகி ஹிட்டடித்த சர்தார் படத்தின் இரண்டாம் பாகமாக அதிக எதிர்ப்பார்ப்புகளுடன் வெளியானது சர்தார் 2 திரைப்படம்.. இதில் கார்த்தி உடன் நடிப்பு அரக்கன் எஸ் ஜே சூர்யாவும் இணைந்ததால் படம் மீதான ஹைப் இரட்டிப்பாகியது. அதேபோல காமெடியனாக இருந்து தன்னுடைய ஸ்க்ரிப்ட் தேர்வின் மூலம் ஹீரோவாக சர்ப்ரைஸ் கொடுத்துவரும் சூரி, அடுத்து என்ன மாதிரியான கதையை தேர்வுசெய்து களம்காணப்போகிறார் என்ற எதிர்ப்பார்ப்புடன் வெளியானது மண்டாடி.Sardar 2இப்படி எதிர்ப்பார்ப்புகளுக்கு இடையே வெளியான இப்படங்களில் கார்த்தியின் சர்தார் 2 திரைப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றுவருகிறது. மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட சர்தார் 2 திரைப்படத்தின் நீண்ட நேர ஓட்டம் படத்திற்கு பின்னடைவாக அமைந்துவிட்டதாகப் பார்வையாளர்கள் கருதுகின்றனர். முதல் பாதி விறுவிறுப்பாக இருந்தாலும், இரண்டாம் பாதியில் கதை அதன் வேகத்தை இழந்துவிட்டதாக பலர் விமர்சித்து வருகின்றனர். இதன் தாக்கம் படத்தின் வசூலிலும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. SooriMandaadiஅதேநேரம் சூரியின் நடிப்பில் வெளியான மண்டாடி திரைப்படம், அதன் விறுவிறுவான திரைக்கதை மற்றும் மேக்கிங்கிற்காக பாராட்டப்பட்டுவருகிறது. படம் சொல்லப்பட்ட விதத்திற்காக இயக்குநருக்கும் பாராட்டுகள் குவிந்துவருகின்றன. குடும்பத்துடன் சேர்ந்து பார்க்கும் படம் என்பதால் நாளுக்கு நாள் மண்டாடிக்கான வரவேற்பு அதிகரித்து வருகிறது. அதன் எதிரொலியாக படம் வெளியான 3ஆம் நாளில் கார்த்தியின் சர்தார் 2 படத்தை விட, மண்டாடியின் வசூல் 2 மடங்கு அதிகரித்துள்ளது. அதுமட்டுமில்லாமல் தியேட்டருக்கு வருவோரின் எண்ணிக்கையும், டிக்கெட் புக்கிங்கும் இருமடங்கு அதிகரித்துள்ளது. அதேநேரத்தில் சர்தார் 2விற்கு பாதியாக குறைந்துள்ளது. கார்த்தியை ஓரங்கட்டிய சூரி.. பாக்ஸ் ஆஃபிஸை பொறுத்தவரையில் sacnilk.com அப்டேட்டின் படி 3ஆம் நாளில் சூரியின் மண்டாடி மொத்தமாக இந்திய அளவில் 16.23 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. அதேநேரம் கார்த்தியின் சர்தார் 2 இந்தியா நெட் கலக்சனில் 8.17 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்துள்ளது. தியேட்டருக்கு வருவோரின் எண்ணிக்கையும் மண்டாடிக்கு முதல் நாளை விட 13% சதவீதம் அதிகரித்திருக்கும் நிலையில், சர்தார் 2விற்கு 7% சதவீதம் குறைந்துள்ளது. நான் மகான் அல்ல படத்தில் கார்த்தியின் நண்பராக சைட் ரோலில் நடித்திருந்த நடிகர் சூரி, கடைக்குட்டி சிங்கம், விருமன் திரைப்படத்திற்கு பிறகு கார்த்தியுடனேயே ஹீரோவாக போட்டிப்போட்டு, தற்போது கார்த்தியையே வசூலில் பின்னுக்கு தள்ளியுள்ளார். இவை அனைத்தையும் கடந்து சூரியின் ஹார்ட் ஒர்க் மற்றும் ஸ்க்ரிப்ட் தேர்வை தமிழ் சினிமா ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.