“இதுதான் என் அழகின் ரகசியம்” - ஸ்ரேயா சொன்ன அந்த ஒரு விஷயம்
Read at Daily ThanthiCinema and entertainment · 1 outlet covered this
“இதுதான் என் அழகின் ரகசியம்” - ஸ்ரேயா சொன்ன அந்த ஒரு விஷயம்
How outlets told it

Published on: 11 Sep 2026, 1:22 am சென்னை, இதற்கிடையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஸ்ரேயாவிடம் 'எப்படி அழகு குறையாமல் வலம் வருகிறீர்கள்?" என்று கேட்கப்பட்டது. மீண்டும் சினிமாவில் கலக்கும் ஸ்ரேயாதமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக ஜொலித்த ஸ்ரேயா சரண், வளைவு நெளிவான நடனத்தாலும் ரசிகர்களைக் கவர்ந்தார். திருமணத்துக்கு பிறகு சில ஆண்டுகள் படங்கள் நடிக்காமல் இருந்த ஸ்ரேயா, தற்போது மீண்டும் மும்முரமாக படங்களில் நடித்து வருகிறார். தமிழில் 'சண்டக்காரி'. 'நான் வயலென்ஸ்' படங்களில் நடித்து வருகிறார். எப்படி அழகு குறையாமல் வலம் வருகிறீர்கள்?இதற்கிடையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஸ்ரேயாவிடம் 'எப்படி அழகு குறையாமல் வலம் வருகிறீர்கள்?" என்று கேட்கப்பட்டது. அதற்கு ஸ்ரேயா பதிலளிக்கையில், "நான் என் மனதில் எதையும் ஒளித்து வைப்பது கிடையாது. என்ன தோன்றுகிறதோ... அதை அப்படியே வெளிப்படையாக பேசிவிடுவேன். ஒளிவுமறைவு இல்லாத தெளிவான மனநிலை தான் இதற்கெல்லாம் காரணம் என்று நினைக்கிறேன். இயற்கையும், இறைவனும் கொடுத்த அழகை பாதுகாக்கிறேன். அவ்வளவு தான்". என்று கூறி சிரித்தார்.
