Science and tech · 1 outlet covered this

செல்போன் பேச்சு... மறுமுனையில் கேட்பது நம் குரலே இல்லை.. ஷாக்கிங் தகவல்... உண்மை என்ன தெரியுமா?

How outlets told it

News18 Tamil6523h ago

செல்போன் பேச்சு... மறுமுனையில் கேட்பது நம் குரலே இல்லை.. ஷாக்கிங் தகவல்... உண்மை என்ன தெரியுமா?

Read at News18 Tamil
செல்போன் பேச்சு... மறுமுனையில் கேட்பது நம் குரலே இல்லை.. ஷாக்கிங் தகவல்... உண்மை என்ன தெரியுமா?
Photo: News18 Tamil

Trending:சற்றுமுன்Disco With KSDid You KnowOTT SpotDecodeShort NewsI3 With KSFollow Usfacebooktwitterinstagramyoutubeசெல்போனில் பேசும்போது வெளியாவது உங்க குரலே இல்லை.. ஷாக்கிங் தகவல்... உண்மை என்ன தெரியுமா?Published by:Salanraj RLast Updated:Sep 13, 2026 5:10 PM ISTஇதுவரை நாம் மொபைல் போனில் பேசிய எந்தவொரு காலிலும், நமது உண்மையான குரல் அலைக்காற்றில் பயணித்ததே இல்லை. பின்பு, மறுமுனை போனில் உள்ளவர்கள் எப்படி கேட்கிறார்கள்? 1/8மொபைல் போன் இன்றி அமையாது உலகு என்ற நிலைக்கு மனித சமூகம் வந்துள்ளது. மொபைல் போனானது ஒரு துணை உலகமாக, மனித வாழ்வியக்கத்தில் எங்கும் வியாபித்து ஊடுருவி நிற்கிறது.  எண்ணற்ற மாயமந்திரங்களையும் நுட்பமான சூட்சமான அறிவியலையும்  தன்னகத்தே ஒளித்து வைத்துக் கொண்டிருக்கிறது. உதாரணமாக, இதுவரை மொபைலில் நாம் பேசிய எந்தவொரு காலிலும், நமது உண்மையான குரல் காற்றில் பயணித்ததே கிடையாது. உற்றார் உறவினர்களிடம் மணிக்கணக்கில் மொபைல் போன் வழியாக பேசியிருப்போம். ஆனால், ஓருமுறை கூட நமது குரல் நேரடியாக காற்றில் கடத்தப்பட்டு அவர்களைச் சென்றடையவில்லை என்பது தான் உண்மையை. இந்த சூட்சமமான தொழில்நுட்பத்தை சாத்தியமாக்கியவர் இந்தியாவின் கான்பூரில் பிறந்த ஒருவர்தான். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, நம் நாட்டிலேயே பலருக்கு அவர் பெயர் கூடத் தெரியாது.2/8பிஷ்ணு அடல் 1933-ம் ஆண்டு மே 10-ம் தேதி கான்பூரில் பிறந்தார். லக்னோ பல்கலைக்கழகத்தில் இயற்பியல் படித்தார். பிறகு பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தில் படித்துவிட்டு, அங்கேயே மூன்று ஆண்டுகள் ஆசிரியராகவும் பணியாற்றினார். 1961-ல் அமெரிக்காவின் புகழ்பெற்ற Bell Labs ஆய்வு நிறுவனத்தில் வேலையில் சேர்ந்தார். ட்ரான்சிஸ்டரையும் லேசரையும் கண்டுபிடித்த இந்த நிறுவனத்தில் தான் சுமார் 35 ஆண்டுகள் பணியாற்றினார்.3/8தொழில்நுட்ப ரீதியில் பார்த்தால், நமது குரல் என்பது மிகப்பெரிய அளவிலான ஒரு 'டேட்டா'. அந்த ஒரிஜினல் ஒலியை அப்படியே நெட்வொர்க் வழியாக அனுப்ப முயன்றால், அது அதிகப்படியான அலைவரிசையை ஆக்கிரமித்துக்கொள்ளும். 1980-களில் மொபைல் போன்கள் பயன்பாட்டுக்கு வரத் தொடங்கியபோது, நெட்வொர்க்குகளில் பெரும் இடப்பற்றாக்குறை ஏற்பட்டது. ஏனென்றால், காற்றில் உள்ள ரேடியோ அலைவரிசைக்கு ஒரு குறிப்பிட்ட வரம்பு உண்டு; அதை நம்மால் புதிதாக உருவாக்கிவிடவும் முடியாது.4/8இந்தச் சிக்கலுக்கு பிஷ்ணு அடல் ஒரு மிகச்சிறந்த தீர்வைக் கண்டறிந்தார். பொதுவாக, நாம் பேசும்போது ஒவ்வொரு நொடியிலும் வெளிவரும் ஒலியானது, அதற்கு முந்தைய நொடியில் வந்த ஒலியோடு நெருங்கிய தொடர்பு கொண்டது. காரணம், அவை இரண்டும் நமது ஒரே குரல்வளையில் இருந்துதான் அடுத்தடுத்து உற்பத்தியாகின்றன.5/8இந்த நுட்பத்தைப் புரிந்துகொண்ட அவர், ஒரிஜினல் ஒலியை அப்படியே அனுப்புவதற்குப் பதிலாக ஒரு மாற்று வழியைக் கண்டுபிடித்தார். அதாவது, உங்கள் குரல் எப்படி உருவாகிறது என்ற தகவலைச் சில டிஜிட்டல் எண்களாக (Numbers) மாற்றி, அந்த எண்களை மட்டுமே மொபைல் போன் மறுமுனைக்கு அனுப்புகிறது. அந்த எண்களைப் பெற்றுக்கொள்ளும் மறுமுனையில் உள்ள போன், தொழில்நுட்ப உதவியுடன் உங்கள் குரலை அப்படியே தத்ரூபமாக மீண்டும் உருவாக்குகிறது. சுருக்கமாக புரிந்து கொள்ள வேண்டுமானால், மொமைல் போனில் உரையாடும் போது, நமது உண்மையான குரல் அலைக்காற்றில் பயணிப்பதே இல்லை. மாறாக, நமது குரலைப் பற்றிய ஒரு சுருக்கமான கணித குறியீட்டை (விவரத்தை) மட்டுமே அனுப்பி வைக்கிறது.  அதைப் பெற்றுக்கொள்ளும் மறுமுனை மொபைல், மீண்டும் நமது குரலை தத்ரூபமாக வார்த்தெடுக்கிறது.6/8இந்தத் தொழில்நுட்பத்தின் பெயர்தான் Linear Predictive Coding. 1960-களின் பிற்பகுதியிலும் 1970-களிலும் பிஷ்ணு அடல் இதை வடிவமைத்தார். இதன் ஆரம்பகால வடிவம் மிகச் சிறப்பாகச் செயல்பட்டதால், அமெரிக்க ராணுவம் தனது ரகசியத் தகவல் தொடர்புகளுக்கு இதைப் பயன்படுத்தத் தொடங்கியது. ஆனால், இதில் ஒரேயொரு சிறு குறைபாடு இருந்தது. மறுமுனையில் கேட்கும் குரல், இயல்பான மனிதக் குரலாக இல்லாமல் சற்று இயந்திரத்தனமாக ஒலித்தது.7/8அந்தக் குறையைக் போக்கும் வகையில், 1985-ல் CELP (Code-Excited Linear Prediction) என்ற புதிய மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தை உருவாக்கினார். இதுவே, சாதாரண 2G போன் கால்களில் தொடங்கி, இன்றைய வாட்ஸ்அப், வாய்ஸ் நோட், ஜூம் கால்கள் வரை, உலகெங்கும் உள்ள அத்தனை மொபைல் நெட்வொர்க்குகளிலும் இந்தத் தொழில்நுட்பமே இன்றுவரை அடிப்படை ஆதாரமாக இயங்கி வருகிறது. உலகம் முழுவதும் 600 கோடி பேர் மொபைல் போன்கள் பயன்படுத்துவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. CELP தொழில்நுட்பம் மட்டும் இல்லையென்றால், இத்தனை கோடி மக்கள் மொபைல் போனைப் பயன்படுத்தும் அளவுக்குக் அலைக்காற்று இருந்திருக்கவே இருக்காது.8/8பிஷ்ணு அடல் அமெரிக்காவில் 16 காப்புரிமைகளையும், உலகம் முழுவதும் பல காப்புரிமைகளையும்  சொந்தமாக்கியுள்ளார். 1994-ல் Bell Labs Fellow ஆக தேர்வு செய்யப்பட்டார். 2003-ல், அமெரிக்காவின் பழமையான மற்றும் மிக உயரிய அறிவியல் விருதுகளில் ஒன்றான பெஞ்சமின் பிராங்க்ளின் மெடலையும் வென்றார். கடந்த 2026-ம் ஆண்டு தனது 93-வது வயதில் காலமானார். எனவே, அடுத்த முறை போனில் பேசும்போ குரலற்றவள்களின் குரலாக இருந்த பிஷ்ணு அடலை நினைவில் கொள்ளுங்கள்.