Sports · 1 outlet covered this

ஆப்கானிஸ்தான் தொடர்: இந்திய அணி தீவிர பயிற்சி

How outlets told it

ஆப்கானிஸ்தான் தொடர்: இந்திய அணி தீவிர பயிற்சி
Photo: Daily Thanthi

Published on: 12 Sep 2026, 10:14 amபுதுடெல்லி, ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தொடருக்கு முன்பாக இந்திய வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். வெள்ளிக்கிழமை நடைபெற்ற முழு அணிப் பயிற்சியில் ஜஸ்பிரித் பும்ரா பந்துவீசி பயிற்சி செய்தார். இஷான் கிஷன், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் சுழற்பந்து வீச்சாளர்களை எதிர்கொண்டு பேட்டிங் பயிற்சி செய்தனர். வாஷிங்டன் சுந்தர், வருண் சக்கரவர்த்தி, அக்சர் படேல், ரவி பிஷ்னோய் ஆகியோர் பந்துவீச்சு பயிற்சியில் ஈடுபட்டனர். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட இருபது ஓவர் தொடர் செப்டம்பர் 13, 15 மற்றும் 17 ஆகிய தேதிகளில் டெல்லியில் நடைபெறுகிறது. இந்திய அணியில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையில், அபிஷேக் சர்மா, வைபவ் சூர்யவன்ஷி, சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், திலக் வர்மா உள்ளிட்ட வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். மேலும், ஹர்ஷித் ராணா காயம் காரணமாக தொடரிலிருந்து விலகியதால், அவருக்குப் பதிலாக யாஷ் தாக்கூர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.