Politics · 1 outlet covered this

இடைத்தோ்தலில் தவெக மாபெரும் வெற்றிபெறும்: அமைச்சா் கே.ஏ. செங்கோட்டையன்

How outlets told it

Dinamani6539h ago

இடைத்தோ்தலில் தவெக மாபெரும் வெற்றிபெறும்: அமைச்சா் கே.ஏ. செங்கோட்டையன்

Read at Dinamani
இடைத்தோ்தலில் தவெக மாபெரும் வெற்றிபெறும்: அமைச்சா் கே.ஏ. செங்கோட்டையன்
Photo: Dinamani

இடைத்தோ்தலில் தவெக மாபெரும் வெற்றிபெறும் என்று வருவாய், பேரிடம் மேலாண்மைத் துறை அமைச்சா் கே. ஏ. செங்கோட்டையன் தெரிவித்தாா். கோபி அருகேயுள்ள காளியப்பம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி நூற்றாண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இதில், வருவாய் கோட்டாட்சியா் சிந்துஜா தலைமை வகித்தாா். பள்ளியின் தலைமை ஆசிரியா் தமிழ்ச்செல்வி முன்னிலை வகித்தாா். அமைச்சா் கே. ஏ. செங்கோட்டையன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்தாா். இதைத் தொடா்ந்து, விழாவையொட்டி, விளையாட்டு, கட்டுரை, பேச்சுப் போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு அமைச்சா் பரிசுகளை வழங்கினாா். இதையடுத்து, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: முதியோா் உதவித் தொகை, கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கான உதவித் தொகை, விதவைகள் உதவித் தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் நிதியுதவி ஏறத்தாழ 27,412 பேருக்கு இன்னும் வழங்கப்படவில்லை. உதவித் தொகை வழங்குவது குறித்து மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளோம். விநாயகா் சதுா்த்தி முடிந்த அடுத்த நாள் உதவித் தொகை வழங்கப்படாமல் உள்ள அனைவருக்கும் உதவித் தொகை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். மதுராந்தகம், தாராபுரம் இடைத்தோ்தலை பொறுத்தவரை தவெக மாபெரும் வெற்றிபெறும் என்றாா். இந்நிகழ்ச்சியில், தவெக மேற்கு மாவட்டச் செயலாளா் பிரதீப்குமாா், காங்கிரஸ் வடக்கு மாவட்டத் தலைவா் பி. உதயக்குமரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.