தமிழகத்தின் பல பகுதிகளில் மின்தடை ஏன்? - அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!
Read at DinamaniPolitics · 1 outlet covered this
தமிழகத்தின் பல பகுதிகளில் மின்தடை ஏன்? - அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!
How outlets told it

காற்றாலை மின்சாரம் தடைபட்டதால் தமிழகத்தில் இரண்டு நாள்கள் மின்சாரம் தட்டுப்பாடு ஏற்பட்டதாக அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்தார். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர் மின்தடை ஏற்பட்டு வருகிறது. சென்னையில் பல பகுதிகளிலும் மின்தடை குறித்த புகார்கள் எழுந்துள்ளன. இதனால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். அதேபோல நேற்று இரவு நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் பகுதியில் தொடர் மின்வெட்டைக் கண்டித்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தென் மாநிலங்கள் முழுவதுமே இந்த மின்தடை பிரச்னை இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் தமிழகத்தில் மின்தடை குறித்து மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல்குமார் விளக்கமளித்துள்ளார். அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "காற்றாலை மின்சாரம் தடைபட்டதால் இரண்டு நாட்கள் மின்சாரம் தட்டுப்பாடு ஏற்பட்டது. இது தமிழகத்தில் மட்டுமல்ல பெரும்பாலான மாநிலங்களில் நிலவும் தட்டுப்பாடு. நேற்று மாலை தமிழகத்திற்கு தேவையான மின்சாரம் பொது விநியோகத்தில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டது. நேற்று மாலை முதல் அனைத்து இடங்களிலும் சீரான மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இது தமிழகத்தில் மட்டுமல்ல பெரும்பாலான மாநிலங்களில் நிலவும் தட்டுப்பாடு. தமிழகத்தில் நேற்று மாலை முதல் போதுமான மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என்பதை தெரிவித்து கொள்கிறோம்" என்று பதிவிட்டுள்ளார்.
