குடமுழுக்கு விழாவுக்கு பக்தர்களும் கைகோர்க்கலாம்.. ஹோம சாமான்கள் வழங்க அழைப்பு
Read at News18 TamilReligion and culture · 1 outlet covered this
குடமுழுக்கு விழாவுக்கு பக்தர்களும் கைகோர்க்கலாம்.. ஹோம சாமான்கள் வழங்க அழைப்பு
How outlets told it

Trending:சற்றுமுன்Disco With KSDid You KnowOTT SpotDecodeShort NewsI3 With KSFollow Usfacebooktwitterinstagramyoutubeகுடமுழுக்கு விழாவுக்கு பக்தர்களும் கைகோர்க்கலாம்.. ஹோம சாமான்கள் வழங்க அழைப்புReported by:YuvathikaPublished by:pradeepa mLast Updated:Sep 11, 2026 5:17 PM ISTமதுரை மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர் கோயிலில் செப்டம்பர் 17-ம் தேதி நடைபெற உள்ள மகா குடமுழுக்கு விழாவிற்கான யாகசாலை பூஜைகளுக்கு ஹோம சாமான்களை வழங்க பக்தர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.1/5மதுரை மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர் கோயிலில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு மகா குடமுழுக்கு விழா செப்டம்பர் 17-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பணிகள் கோயில் நிர்வாகம் சார்பில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குடமுழுக்கை முன்னிட்டு பல்வேறு கட்டங்களாக சிறப்பு பூஜைகள் மற்றும் யாகசாலை பூஜைகள் நடைபெற உள்ளன.2/5குடமுழுக்கு விழாவை முன்னிட்டு கோயில் வளாகத்தின் வடக்காடி வீதியில் யாகசாலை அமைக்கப்பட்டு, அதில் சிறப்பு யாகசாலை பூஜைகள் நடைபெறுகின்றன. செப்டம்பர் 11-ம் தேதி முதல் யாகசாலை பூஜைகள் தொடங்கி, குடமுழுக்கு நடைபெறும் செப்டம்பர் 17-ம் தேதி வரை மொத்தம் 12 கால யாகசாலை பூஜைகள் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.3/5இந்த யாகசாலை பூஜைகளுக்குத் தேவையான ஹோம சாமான்களை பக்தர்கள் உபயமாக வழங்கலாம் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. ஹோம சாமான்களை உபயமாக வழங்க விரும்பும் பக்தர்கள், மதுரை வடக்காடி வீதியில் அமைந்துள்ள திருவள்ளுவர் கழகத்தில் அவற்றை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.4/5குடமுழுக்கு விழாவுக்கான ஏற்பாடுகளில் யாகசாலை பூஜைகள் முக்கியமான பகுதியாக உள்ள நிலையில், அதற்குத் தேவையான பொருட்களை பக்தர்கள் தங்களால் இயன்ற வகையில் வழங்குவதற்கான ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் யாகசாலை பூஜைகளுக்குத் தேவையான பொருட்கள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.5/5செப்டம்பர் 17-ம் தேதி காலை 7.40 மணி முதல் 8.10 மணிக்குள் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலின் தங்க விமானங்களுக்கு மகா குடமுழுக்கு நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி கோயில் நிர்வாகம் சார்பில் தொடர்ந்து பல்வேறு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
