Crime and courts · 1 outlet covered this

பட்டாசு வெடிக்கத் தடை, 24 மணி நேரக் கண்காணிப்பு: விநாயகர் சதுர்த்திக்கான வழிகாட்டுதல்கள் வெளியீடு..!

How outlets told it

News18 Tamil654d ago

பட்டாசு வெடிக்கத் தடை, 24 மணி நேரக் கண்காணிப்பு: விநாயகர் சதுர்த்திக்கான வழிகாட்டுதல்கள் வெளியீடு..!

Read at News18 Tamil
பட்டாசு வெடிக்கத் தடை, 24 மணி நேரக் கண்காணிப்பு: விநாயகர் சதுர்த்திக்கான வழிகாட்டுதல்கள் வெளியீடு..!
Photo: News18 Tamil

Trending:சற்றுமுன்பட்ஜெட் தொடர்Disco With KSDid You KnowOTT SpotShort NewsI3 With KSFollow UsfacebooktwitterinstagramyoutubeReported by:Sundaravadivel EPublished by:Muthu KathanLast Updated:Sep 10, 2026 11:58 AM ISTசென்னையில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்திற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. சிலை நிறுவப்படும் இடங்களில் CCTV கட்டாயம் பொருத்த வேண்டும் என காவல் ஆணையர் அறிவுறுத்தியுள்ளார்.1/5சென்னையில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்துக்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ள நிலையில், சிலை நிறுவப்படும் இடங்களின் பாதுகாப்பில் காவல்துறை கூடுதல் கவனம் செலுத்தியுள்ளது. செப்டம்பர் 14-ஆம் தேதி விழா நடைபெற உள்ளதால், சிலை வைக்கும் இடங்களில் கண்காணிப்பு கேமரா கட்டாயம் பொருத்த வேண்டும் என காவல் ஆணையர் ஏ. அமல்ராஜ் அறிவுறுத்தியுள்ளார். பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து வேப்பேரியில் ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்றது.2/5காவல் ஆணையர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், 29 இந்து அமைப்புகளைச் சேர்ந்த சுமார் 200 பிரதிநிதிகள் பங்கேற்றனர். சிலை அமைக்க நில உரிமையாளர், உள்ளாட்சி அமைப்பு, நெடுஞ்சாலைத் துறை அல்லது சம்பந்தப்பட்ட அரசுத் துறையிடம் அனுமதி பெற வேண்டும். மேலும், தீயணைப்புத் துறை மற்றும் மின்வாரியத்திடமிருந்து தடையில்லாச் சான்று பெற்று, காவல் நிலையத்தில் உரிய படிவங்களைச் சமர்ப்பித்து அனுமதி பெற வேண்டும்.3/5சிலையின் உயரம் 10 அடிக்கு மிகாமல் இருக்க வேண்டும். சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் பொருட்களைப் பயன்படுத்தக் கூடாது. வழிபாட்டுத் தலங்கள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்களுக்கு அருகில் சிலைகளை நிறுவுவதைத் தவிர்க்க வேண்டும். சிலை நிறுவப்படும் இடத்தில் CCTV கட்டாயம் பொருத்துவதுடன், அதன் பாதுகாப்புக்காக இரண்டு தன்னார்வலர்களை 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியில் வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.4/5விழா நடைபெறும் இடத்தில் பிற மதத்தினரின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் பேச்சு அல்லது முழக்கங்கள் இருக்கக் கூடாது. அரசியல் கட்சிகள் அல்லது மதத் தலைவர்களுக்கு ஆதரவான விளம்பரப் பலகைகள், தட்டிகளையும் வைக்கக் கூடாது. சிலை ஊர்வலம் காவல்துறை அனுமதித்த நாளிலும், குறிப்பிட்ட வழித்தடத்திலும் மட்டுமே நான்கு சக்கர வாகனங்களில் நடைபெற வேண்டும். சிலை வைக்கும் இடம், ஊர்வலப் பாதை மற்றும் கரைக்கும் இடங்களில் பட்டாசு வெடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.5/5தீ மற்றும் மின்சாரப் பாதுகாப்பு விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என காவல்துறை தெரிவித்துள்ளது. சிலைகள் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் இருக்க வேண்டும் என்பதிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. காவல்துறை, மாநகராட்சி உள்ளிட்ட துறைகள் இணைந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அனுமதி நடைமுறைகளை முன்கூட்டியே முடித்து, விதிமுறைகளை முறையாகப் பின்பற்றினால் விநாயகர் சதுர்த்தி விழாவை அமைதியாக நடத்த முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.