World · 2 outlets covered this

அமெரிக்காவும் இஸ்ரேலும் மிரட்டி பணிய வைக்க முயற்சிக்கின்றன; டெல்லியில் ஈரான் அதிபர் பேச்சு

How outlets told it

Daily Thanthi992d ago

அமெரிக்காவும் இஸ்ரேலும் மிரட்டி பணிய வைக்க முயற்சிக்கின்றன; டெல்லியில் ஈரான் அதிபர் பேச்சு

Read at Daily Thanthi
Dinamalar6547h ago

மேற்காசியாவில் அமைதி திரும்புவதற்கு இணைந்து பணியாற்ற தயார்; சீன அதிபர் ஜின்பிங் உறுதி

Read at Dinamalar
அமெரிக்காவும் இஸ்ரேலும் மிரட்டி பணிய வைக்க முயற்சிக்கின்றன; டெல்லியில் ஈரான் அதிபர் பேச்சு
Photo: Daily Thanthi

Published on: 12 Sep 2026, 1:23 amபுதுடெல்லி: அமெரிக்காவும், இஸ்ரேலும் ஈரானை மிரட்டி பணிய வைக்க முயற்சிப்பதாகவும், ஆனால் அதற்கு ஒருபோதும் அடிபணிய மாட்டோம் என்றும் ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் தெரிவித்தார். டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மசூத் பெசெஷ்கியான் கூறியதாவது; “அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக ஈரான் ஒரே நேரத்தில் உறுதியாக நிற்கிறது. அவர்கள் எங்களை மிரட்ட விரும்புகிறார்கள். ஆனால் நாங்கள் மிரட்டலுக்கு அடிபணிய மாட்டோம். எங்களுக்கு அழுத்தம் கொடுத்தால், அதற்கு பதிலடி கொடுப்போம். நேர்மாறாக உள்ளனமனித உரிமைகளுக்கு ஆதரவாக இருப்பதாக அமெரிக்காவும் இஸ்ரேலும் கூறிக்கொள்கின்றன. ஆனால் அவர்களது நடவடிக்கைகள் அதற்கு நேர்மாறாக உள்ளன. நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி ஒரே நேரத்தில் 168 பள்ளி மாணவர்களை கொன்றவர்கள், மனித உரிமைகளின் பாதுகாவலர்கள் என்று கூறிக்கொள்கிறார்கள்” என்றார். பிரதமர் மோடி வலியுறுத்தல்முன்னதாக ஈரான் அதிபர் பெசெஷ்கியானை பிரதமர் நரேந்திர மோடி நேற்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். மேற்கு ஆசியாவில் நீடித்து வரும் மோதல், கடல் வழிப் போக்குவரத்து மற்றும் கப்பல் பணியாளர்களின் பாதுகாப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசித்தனர். குறிப்பாக, ஹார்முஸ் நீரிணை வழியாக சர்வதேச கப்பல் போக்குவரத்து பாதுகாப்பாக நடைபெற வேண்டியதன் அவசியத்தை பிரதமர் மோடி வலியுறுத்தினார். பிராந்தியத்தில் நீடித்த அமைதி மற்றும் நிலைத்தன்மையை ஏற்படுத்த பேச்சுவார்த்தை மற்றும் தூதரக நடவடிக்கைகள் மூலம் தீர்வு காண வேண்டும் என்றும் அவர் கூறினார்.