ஃப்யூஸ் போன... தொடர் மின்வெட்டு குறித்து உதயநிதி விமர்சனம்!
Read at DinamaniPolitics · 1 outlet covered this
ஃப்யூஸ் போன... தொடர் மின்வெட்டு குறித்து உதயநிதி விமர்சனம்!
How outlets told it

தவெக அரசு திசைதிருப்பும் வேலைகளை நிறுத்திவிட்டு, மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சனிக்கிழமை (செப். 12) தெரிவித்துள்ளார். மின்வெட்டு பிரச்னைகளைச் சுட்டிக்காட்டிய அவர் தவெக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் அறிவிக்கப்படாத மின்வெட்டு, மின்சாரம் இருந்தாலும் வோல்டேஜ் பிரச்னை என மக்கள் வெகுண்டெழுந்து வீதிக்கு வந்து போராடிக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால், துறைக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சரோ, இதைச் சரிசெய்யும் முயற்சிகளைச் செய்யாமல் தேவையில்லாத அவதூறுகளை உளறிக் கொண்டிருக்கிறார். மின்சாரம், ஆவின் பால் விநியோகம் என மக்களின் அன்றாட அடிப்படைத் தேவைகளையே பூர்த்தி செய்ய முடியாமல் திண்டாடும் 'ஃப்யூஸ் போன' த. வெ. க. அரசு திசைதிருப்பும் வேலைகளை நிறுத்திவிட்டு, மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
