வரலாறு காணாத வெப்ப அலை... ஒரே வாரத்தில் 10,000-த்துக்கும் மேற்பட்டோர் மரணம்! எங்கே தெரியுமா?
Read at News18 TamilWorld · 1 outlet covered this
வரலாறு காணாத வெப்ப அலை... ஒரே வாரத்தில் 10,000-த்துக்கும் மேற்பட்டோர் மரணம்! எங்கே தெரியுமா?
How outlets told it

Trending:சற்றுமுன்பட்ஜெட் தொடர்Disco With KSDid You KnowOTT SpotShort NewsI3 With KSFollow UsfacebooktwitterinstagramyoutubePublished by:Nivetha Jnews18-tamilLast Updated:Sep 10, 2026 2:28 PM ISTமனிதர்களால் ஏற்படும் பருவநிலை மாற்றம் இல்லாமல் இந்த அளவுக்கு தீவிரமான வெப்ப அலை ஏற்பட்டிருக்க வாய்ப்பு மிகவும் குறைவு என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.1/5ஐரோப்பாவில் ஜூன் மாத இறுதியில் வீசிய வரலாறு காணாத வெப்ப அலையால் ஒரே வாரத்தில் மேலும் 10,650 பேர் உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஜூன் 22 முதல் 28-ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில், 27 ஐரோப்பிய நாடுகளின் இறப்பு புள்ளிவிவரங்களை அடிப்படையாகக் கொண்ட ஆய்வில் இந்த தகவல் தெரியவந்துள்ளது.2/5இதில் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. வெப்ப அலையின் போது வெப்பத் தாக்கம் ஏற்படுவதுடன், இதய மற்றும் சுவாச நோய்களை தீவிரப்படுத்துவதால் முதியவர்கள் அதிகம் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.3/5இந்த காலக்கட்டத்தில் பிரான்ஸ், ஸ்பெயின், பிரிட்டன் உள்ளிட்ட மேற்கு ஐரோப்பிய நாடுகளில் வெப்பநிலை உச்சத்தைத் தொட்டது. அதிக வெப்பத்தால் மின்சார விநியோகம் பாதிக்கப்பட்டதுடன், பள்ளிகள் மூடப்பட்டன.4/5இந்த திடீர் உயிரிழப்பு அதிகரிப்புக்கு கொரோனா போன்ற வேறு முக்கிய காரணிகள் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.5/5மனிதர்களால் ஏற்படும் பருவநிலை மாற்றம் இல்லாமல் இந்த அளவுக்கு தீவிரமான வெப்ப அலை ஏற்பட்டிருக்க வேறு வாய்ப்புகள் இல்லையென்றும், அப்படி இருந்தாலும் அவை மிகவும் குறைவு என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
