Crime and courts · 2 outlets covered this

நெல்லையில் கஞ்சா விற்பனை: மருந்து சரக்கு குற்றவாளிகள் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது

How outlets told it

Daily Thanthi992d ago

நெல்லையில் கஞ்சா விற்பனை: மருந்து சரக்கு குற்றவாளிகள் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது

Read at Daily Thanthi
Dinamani652d ago

கஞ்சா விற்ற இருவா் குண்டா் சட்டத்தில் கைது

Read at Dinamani
நெல்லையில் கஞ்சா விற்பனை: மருந்து சரக்கு குற்றவாளிகள் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
Photo: Daily Thanthi

Published on: 11 Sep 2026, 5:15 pmதிருநெல்வேலி, நெல்லையில் கஞ்சா விற்பனை செய்து பொது ஒழுங்கு, பொது சுகாதார பராமரிப்பிற்கு குந்தகம் விளைவித்து வந்த மருந்து சரக்கு குற்றவாளிகள் 2 பேரை போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து பாளை மத்திய சிறையில் அடைத்தனர். மருந்து சரக்கு குற்றவாளிகள்திருநெல்வேலி மாவட்டம், சீவலப்பேரியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் சுடலைகண்ணு (வயது 22), தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த முத்துகுமார் மகன் மகேஷ்(21) ஆகிய 2 பேர், திருநெல்வேலி மாநகர பகுதியில் கஞ்சா போதை பொருள் விற்பனை செய்து எதிர்மறை கண்காணிப்பிற்கு வந்து, பொது ஒழுங்கு மற்றும் பொது சுகாதார பராமரிப்பிற்கு குந்தகம் விளைவித்து வந்த “மருந்து சரக்கு குற்றவாளிகள்” ஆவர். இந்த நிலையில் மேற்சொன்ன 2 பேரும் திருநெல்வேலி டவுண் காவல் நிலைய இன்ஸ்பெக்டரின் பரிந்துரையின் பேரில், திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனரின் உத்தரவுப்படி நேற்று (10.9.2026) குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் தடுப்புக்காவலில் அடைக்கப்பட்டனர்.