எதைப் பார்க்க வேண்டும்? அல்காரிதம் அல்ல, இனி நீங்களே தேர்வு செய்யலாம்!
Read at DinamaniWorld · 1 outlet covered this
எதைப் பார்க்க வேண்டும்? அல்காரிதம் அல்ல, இனி நீங்களே தேர்வு செய்யலாம்!
How outlets told it

சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தும்போது, நாம் பின்தொடராத கணக்குகள் பதிவுகள் தொடர்ந்து வந்து நம்மை எரிச்சலூட்டுகின்றது. இதைக் கட்டுப்படுத்த ஆஸ்ரேலிய அரசு புதிய திட்டம் ஒன்றைக் கொண்டுவரவுள்ளது. மை ஃபீட், மை வே (My Feed, My Way) என்பது சமூக ஊடக அல்காரிதங்களின் கட்டுப்பாட்டைப் பயனர்களிடமே வழங்குவதற்காக ஆஸ்திரேலிய அரசால் கொண்டு வரப்பட்ட ஒரு புதிய சட்ட வரைவுத் திட்டமாகும். இந்த முயற்சியின் முக்கிய அம்சங்கள்... சமூக வலைத்தளங்களை நாம் பன்படுத்தும்போது நாம் பின்தொடராத கணக்குகளின் பதிவுகள், விடியோக்கள் என அல்காரிதம் பரிந்துரைக்கும் தகவல்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும். இதைப் பயனர்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் வகையில் ஆஸ்திரேலியா 'மை பீட் மை வே' என்ற புதிய திட்டத்தை முன்மொழிந்துள்ளது. இதன்படி சமூக வலைத்தளங்களில் அல்காரிதம் பரிந்துரைக்கும் பதிவுகள் வேண்டுமா அல்லது தாங்கள் பின்தொடரும் நண்பர்கள் மற்றும் படைப்பாளர்களின் பதிவுகள் மட்டும் வேண்டுமா என்பதைப் பயனர்களே தேர்வு செய்யலாம். இதன் மூலம் நீங்கள் எதைப் பார்க்க வேண்டும்? என்பதை அல்காரிதம் அல்ல , நீங்களே முடிவு செய்யும் வாய்ப்பு கிடைக்க உள்ளது. மெட்டா, டிக்டாக், கூகுள் போன்ற பெரிய சமூக ஊடக நிறுவனங்கள் பயனர்களுக்கு அவர்களின் விருப்பப்படி உள்ளடக்கத்தைத் தேர்ந்தெடுக்கும் வசதியை வழங்க வேண்டும். விதிமுறைகளைப் பின்பற்றாத பட்சத்தில் அவர்களுக்கு 109.2 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர் வரையிலான அபராதங்கள் விதிக்கப்படும் என எச்சரித்துள்ளது. இந்த புதிய திட்டத்தால் 16 வயதிற்குள்பட்ட சிறார்கள் தேவையற்ற பதிவுகளை எதிர்கொள்ள நேரிடாது என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
