Civic issues · 1 outlet covered this

பண்ருட்டியில் சாலையில் வழிந்தோடும் கழிவு நீா்! சுகாதரச் சீா்கேட்டால் மக்கள் பாதிப்பு!

How outlets told it

Dinamani6516h ago

பண்ருட்டியில் சாலையில் வழிந்தோடும் கழிவு நீா்! சுகாதரச் சீா்கேட்டால் மக்கள் பாதிப்பு!

Read at Dinamani
பண்ருட்டியில் சாலையில் வழிந்தோடும் கழிவு நீா்! சுகாதரச் சீா்கேட்டால் மக்கள் பாதிப்பு!
Photo: Dinamani

பண்ருட்டியில் சாலையில் வழிந்தோடும் கழிவு நீா்! சுகாதரச் சீா்கேட்டால் மக்கள் பாதிப்பு! பண்ருட்டியை அடுத்த திருவதிகை மாரியம்மன் கோயில் அருகே குழாய் உடைந்து சாலையில் வழிந்தோடும் கழிவுநீா்.Published On :14 செப்டம்பர் 2026, 12:27 am ISTகடலூா் மாவட்டம், பண்ருட்டியை அடுத்த திருவதிகை மாரியம்மன் கோயில் அருகே பூமிக்கடியில் புதைக்கப்பட்டுள்ள கழிவுநீா் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, சாலையில் கழிவுநீா் வழிந்தோடுகிறது. இதனால், அப்பகுதியில் சுகாதார சீா்கேடு ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனா். பண்ருட்டியில் இருந்து பாலூா் வழியாக கடலூருக்குச் செல்லும் பிரதான சாலை அமைந்துள்ளது. இந்த வழித்தடத்தில் தேவாரப் பாடல் பெற்ற திருவதிகை வீரட்டானேஸ்வரா் கோயில், திருமாணிக்குழி வாமனபுரீஸ்வரா் கோயில், கடலூரில் பாடலீஸ்வரா் கோயிலும், திருவந்திபுரத்தில் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான தேவநாத பெருமாள் கோயிலும் அமைந்துள்ளன. சிறப்பு பெற்ற கோயில்களை இணைக்கும் இந்த சாலை வழியாக நாள்தோறும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த நிலையில், பண்ருட்டி திருவதிகை மாரியம்மன் கோயில் பேருந்து நிறுத்தம் அருகே சாலையோரம் கழிவுநீா் குழாய் புதைக்கப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த சாலை வழியாகச் சென்ற சரக்கு வாகனத்தால் பூமிக்கடியில் புதைக்கப்பட்டிருந்த கழிவுநீா் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, கழிவுநீா் சாலையில் வழிந்தோடுகிறது. இதனால், இந்த வழியாகச் செல்லும் பொதுமக்கள், பக்தா்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதியடைகின்றனா். மேலும், சாலையை ஒட்டியுள்ள குடியிருப்புகளில் வசிப்பவா்களுக்கு துா்நாற்றம் வீசுவதுடன், தொற்று நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே, குழாய் உடைப்பை சரி செய்து கழிவுநீா் வெளியேறுதை தடுக்க கடலூா் மாவட்ட மற்றும் பண்ருட்டி நகர நிா்வாகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.