Crime and courts · 1 outlet covered this

சென்னையில் கள்ளநோட்டு கொடுத்து பால் வாங்க முயன்ற பெண் கைது

How outlets told it

Daily Thanthi992d ago

சென்னையில் கள்ளநோட்டு கொடுத்து பால் வாங்க முயன்ற பெண் கைது

Read at Daily Thanthi
சென்னையில் கள்ளநோட்டு கொடுத்து பால் வாங்க முயன்ற பெண் கைது
Photo: Daily Thanthi

Published on: 12 Sep 2026, 5:37 amசென்னை, சென்னை அமைந்தகரை பகுதியில் கள்ள நோட்டுகளைப் புழக்கத்தில் விட முயன்ற பெண் ஒருவரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். அவரிடமிருந்து பல்லாயிரக்கணக்கான மதிப்பிலான கள்ள ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆவின் பூத்தில் சிக்கிய பெண்சென்னை அமைந்தகரை பகுதியில் உள்ள ஆவின் பால் பூத்திற்கு இன்று (சனிக்கிழமை) அலமேலு என்ற பெண் பால் வாங்குவதற்காக வந்துள்ளார். அவர் பால் வாங்கிவிட்டு அதற்குரிய பணமாக ரூபாய் நோட்டு ஒன்றை அங்குள்ள ஊழியரிடம் கொடுத்தார். அந்த நோட்டின் மீது சந்தேகமடைந்த கடை ஊழியர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர், அது கள்ள நோட்டு என்பதை உறுதி செய்தனர். உடனடியாக இது குறித்து அமைந்தகரை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸ் விசாரணை – வீட்டில் ரூ.42,000 சிக்கியதுதகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், கள்ள நோட்டு மாற்ற முயன்ற அலமேலுவை கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தினர். இதனைத் தொடர்ந்து அவரது வீட்டில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ.42,000 மதிப்புள்ள கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. குப்பைத் தொட்டியில் கிடைத்ததா?போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் அந்த பெண் அளித்துள்ள வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனக்கு இந்த கள்ள நோட்டுகள் அனைத்தும் குப்பைத் தொட்டியில் இருந்துதான் கிடைத்ததாக அவர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இருப்பினும், இந்த பதிலை ஏற்காத போலீசார், கள்ள நோட்டு கும்பலுடன் அந்த பெண்ணுக்கு ஏதேனும் தொடர்பு உள்ளதா? அல்லது கள்ள நோட்டுகளை அச்சடிக்கும் பெரிய கும்பல் ஏதேனும் இதன் பின்னணியில் செயல்படுகிறதா? என்ற கோணத்தில் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.