Accidents · 1 outlet covered this

சேலம் அருகே லாரி மீது ஆம்னி பேருந்து மோதி விபத்து - 15 பேர் படுகாயம்

How outlets told it

Daily Thanthi993d ago

சேலம் அருகே லாரி மீது ஆம்னி பேருந்து மோதி விபத்து - 15 பேர் படுகாயம்

Read at Daily Thanthi
சேலம் அருகே லாரி மீது ஆம்னி பேருந்து மோதி விபத்து - 15 பேர் படுகாயம்
Photo: Daily Thanthi

Published on: 11 Sep 2026, 4:52 amசேலம், சென்னையில் இருந்து நேற்று இரவு தனியார் ஆம்னி பேருந்து ஒன்று சுமார் 45 பயணிகளுடன் கோவை நோக்கி புறப்பட்டு சென்ற‌து. அந்த பேருந்து இன்று அதிகாலை சங்ககிரி மேம்பாலம் அருகே வந்தபோது, பேருந்தின் முன்னால் சென்று கொண்டிருந்த சரக்கு லாரி திடீரென சாலையோர தடுப்பு மீது மோதி நின்றதாக கூறப்படுகிறது. இதனால் பின்னால் வந்த ஆம்னி பேருந்து லாரியின் பின்புறத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தின் முன்பகுதி முற்றிலும் சேதமடைந்தது. இந்த விபத்தில் பேருந்து ஓட்டுநர் உள்பட பேருந்தில் இருந்த 15 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சங்ககிரி போலீசார், விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர்செய்தனர். மேலும், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.