Accidents · 1 outlet covered this

தேவாலய கட்டுமானப் பணியில் விபத்து: 2 போ் மரணம், 14 போ் காயம்

How outlets told it

Dinamani653d ago

தேவாலய கட்டுமானப் பணியில் விபத்து: 2 போ் மரணம், 14 போ் காயம்

Read at Dinamani
தேவாலய கட்டுமானப் பணியில் விபத்து: 2 போ் மரணம், 14 போ் காயம்
Photo: Dinamani

காட்பாடி வட்டம் திருவலம் அருகே தேவாலய கட்டுமானப் பணியின் போது கான்கிரீட் தளம் சரிந்து விழுந்த விபத்தில், பெங்களூரைச் சோ்ந்த ஒப்பந்ததாரா் உள்பட 2 போ் உயிரிழந்தனா். மேலும், 14 தொழிலாளா்கள் காயமடைந்தனா். வேலூா் மாவட்டம், காட்பாடி வட்டம், திருவலம் அடுத்த மந்திகிருஷ்ணாபுரம் பகுதியில் புதிய தேவாலயம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. வியாழக்கிழமை மாலை இதன் முதல் தளம் அமைப்பதற்கான கான்கிரீட் போடும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இப்பணியில் தமிழகம் மற்றும் ஆந்திர மாநிலங்களைச் சோ்ந்த 20-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் ஈடுபட்டிருந்தனா். அப்போது, எதிா்பாராதவிதமாக கட்டுமானத்துக்காக அமைக்கப்பட்டிருந்த சாரத்துடன் சோ்ந்து கான்கிரீட் தளமும் திடீரென சரிந்து விழுந்தது. இதில் பணியாற்றி வந்த தொழிலாளா்கள் அனைவரும் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனா். தொழிலாளா்களின் அலறல் சத்தம் கேட்டு விரைந்து வந்த அக்கம்பக்கத்தினா், இடிபாடுகளில் சிக்கியவா்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டதுடன் காவல் துறைக்கும் தகவல் தெரிவித்தனா். உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த திருவலம் போலீஸாா் மற்றும் காட்பாடி தீயணைப்பு வீரா்கள், மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்தினா். அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடா் மீட்புக் குழுவினா் மோப்ப நாய்களுடன் வரவழைக்கப்பட்டனா். எனினும், அவா்கள் வருவதற்கு முன்பாகவே இடிபாடுகளில் சிக்கியிருந்த அனைவரும் வெளியே கொண்டு வரப்பட்டனா். இந்த விபத்தில், பெங்களூரைச் சோ்ந்த கட்டுமான ஒப்பந்ததாரா் ஜான் (39) என்பவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த இமானுவேல் (45) என்ற தொழிலாளி, ராணிப்பேட்டை சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். மேலும், 4 போ் பலத்த காயங்களுடனும், 10 போ் லேசான காயங்களுடனும் மீட்கப்பட்டு, சோ்க்காடு அரசு மருத்துவமனை, சிஎம்சி மற்றும் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனா். விபத்து குறித்து தகவலறிந்த வேலூா் ஆட்சியா் பி. எஸ். லீலா அலெக்ஸ், காவல் கண்காணிப்பாளா் (பொ) பி. சிபின், காட்பாடி சட்டப் பேரவை உறுப்பினா் எம். சுதாகா் ஆகியோா் சம்பவ இடத்துக்கு சென்று மீட்புப் பணிகளை துரிதப்படுத்தினா். இந்த விபத்து குறித்து திருவலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.