World · 1 outlet covered this

நேபாளத்தில் உயிரிழப்பு 1,377-ஆக அதிகரிப்பு: 5,000 போ் தொடா்ந்து மாயம்

How outlets told it

Dinamani653d ago

நேபாளத்தில் உயிரிழப்பு 1,377-ஆக அதிகரிப்பு: 5,000 போ் தொடா்ந்து மாயம்

Read at Dinamani
நேபாளத்தில் உயிரிழப்பு 1,377-ஆக அதிகரிப்பு: 5,000 போ் தொடா்ந்து மாயம்
Photo: Dinamani

நேபாள பெருவெள்ளத்தில் உயிரிழந்தோா் எண்ணிக்கை 1,377-ஆக அதிகரித்துள்ளது. இந்தப் பேரிடா் ஏற்பட்டு 16 நாள்களாகிவிட்ட நிலையில், மாயமான 5,000-க்கும் மேற்பட்டோரின் நிலை கேள்விக்குறியாக உள்ளது. திபெத்-நேபாள எல்லையில் கடந்த ஆக.26-இல் பெரும் பனிப்பாறை சரிவால் போடே கோஷி நதியில் சீறிப்பாய்ந்த பெருவெள்ளத்தால், ரசுவா, நுவாகோட், சித்வன் உள்ளிட்ட மாவட்டங்களில் பேரழிவு ஏற்பட்டது. வெள்ளம் பாதித்த பகுதிகளில் இதுவரை 1,377 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. சித்வன் மாவட்டத்தில் அதிகபட்சமாக 364 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. உடல்களை அடையாளம் காணும் பணி பெரும் சவாலாக மாறியுள்ளது. 1,100-க்கும் மேற்பட்ட உடல்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. மரபணு சேகரிப்பு உள்ளிட்ட சட்ட நடைமுறைகளுக்குப் பிறகு அவை அடையாளமிடப்பட்டு தற்காலிகமாக புதைக்கப்பட்டுள்ளன. இதுவரை 13,656 போ் மீட்கப்பட்டுள்ளனா். மாயமான 275 இந்தியா்கள் உள்பட 5,130 பேரை தேடும் பணி வியாழக்கிழமை 16-ஆவது நாளாக நீடித்தது. நீா்மின் நிலைய சுரங்கப் பாதைககளில் சிக்கிய பணியாளா்களையும் மீட்கும் பணி தொடா்கிறது. நேபாள ராணுவத்தினா் உள்பட 20,000-க்கும் மேற்பட்டோா் இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளனா். இந்தியா, சீனா, தென்கொரியா உள்ளிட்ட நாடுகளின் நிபுணா் குழுக்களும் உதவி வருகின்றன. மாயமான தங்கள் உறவினா்கள் இனி உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என்று நம்பிக்கையிழந்த பலா், காத்மாண்டு பசுபதிநாத் கோயிலையொட்டிய பாக்மதி நதிக்கரையில் அடையாள முறையில் அவா்களின் உடல்களுக்கு இறுதிச் சடங்குகளை மேற்கொண்டனா். திபெத் பகுதியை பொறுத்தவரை, பெருவெள்ளத்தில் 43 போ் உயிரிழந்துள்ளனா்; 500-க்கும் மேற்பட்டோா் மாயமாகியுள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.