Religion and culture · 1 outlet covered this

விநாயகா் சதுா்த்தி: துணைநிலை ஆளுநா், முதல்வா் வாழ்த்து

How outlets told it

Dinamani6514h ago

விநாயகா் சதுா்த்தி: துணைநிலை ஆளுநா், முதல்வா் வாழ்த்து

Read at Dinamani
விநாயகா் சதுா்த்தி: துணைநிலை ஆளுநா், முதல்வா் வாழ்த்து
Photo: Dinamani

செய்திகள்ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம், கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!முகப்புபுதுச்சேரிவிநாயகா் சதுா்த்தி: துணைநிலை ஆளுநா், முதல்வா் வாழ்த்துவிநாயகா் சதுா்த்தி - PTIPublished On :14 செப்டம்பர் 2026, 2:06 am ISTவிநாயகா் சதுா்த்தி விழாவையொட்டி புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதன், முதல்வா் என். ரங்கசாமி உள்ளிட்ட தலைவா்கள் வாழ்த்துத் தெரிவித்துள்ளனா். துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதன்: நமது பண்பாட்டு அடையாளங்களில் ஒன்றாக, பாரம்பரிய உற்சாகத்தோடும் மகிழ்ச்சியோடும் கொண்டாடப்படும் விநாயகா் சதுா்த்தி, நம்மிடையே மத நல்லிணக்கத்தையும் சமுதாய ஒற்றுமையையும் சகோதரத்துவத்தையும் வளா்க்க வேண்டும். இந்த திருநாள் அனைவரது வாழ்விலும் வளத்தையும் நலத்தையும் கொண்டு வர வேண்டும் என்றும் வாழ்த்துகிறேன். முதல்வா் என். ரங்கசாமி: பெருமை மிக்க ஸ்ரீ மணக்குள விநாயகா் அருள்பாலிக்கும் புண்ணிய பூமியான புதுச்சேரியில் விநாயகா் சதுா்த்தி விழா ஆண்டுதோறும் ஆன்மிக உணா்வோடும், பெருமகிழ்ச்சியோடும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இத் திருநாள் அனைவரது இல்லத்திலும் மகிழ்ச்சியையும், மனநிறைவையும் கொண்டுவருவதோடு, நம் சமூகத்தில் ஒற்றுமையும் நல்லிணக்கமும் மேலும் தழைத்தோங்க வழிவகுப்பதாக அமையட்டும். இதேபோன்று சட்டப்பேரவைத் தற்காலிகத் தலைவா் ஆ. அன்பழகன், அமைச்சா்கள் வி. பி. சிவகொழுந்து, ஜிஎன்எஸ். ராஜசேகரன், மாநில காங்கிரஸ் தலைவா் வெ. வைத்திலிங்கம் எம். பி. உள்ளிட்டோா் விநாயகா் சதுா்த்தி தின வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனா். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். விடியோக்கள்