Education and jobs · 1 outlet covered this

ஐ.ஐ.எம்., ஐ.ஐ.டிகளில் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

How outlets told it

Dinamani6540h ago

ஐ.ஐ.எம்., ஐ.ஐ.டிகளில் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

Read at Dinamani
ஐ.ஐ.எம்., ஐ.ஐ.டிகளில் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
Photo: Dinamani

ஐ. ஐ. எம்., ஐ. ஐ. டிகளில் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்ஐ. ஐ. எம்., ஐ. ஐ. டிகளில் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்... விண்ணப்பிக்க...Published On :13 செப்டம்பர் 2026, 12:42 am ISTமத்திய அரசின் கல்வி நிறுவனங்கள், மத்திய பல்கலைக் கழகங்களில் பயிலும் தமிழக மாணவ, மாணவிகள் 2026-27 ஆம் கல்வி ஆண்டுக்கான (புதியது, புதுப்பித்தல்) கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். இது குறித்து மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் உள்ள ஐ. ஐ. டி., ஐ. ஐ. எம்., ஐ. ஐ. ஐ. டி., என். ஐ. டி., மத்திய பல்கலைக் கழகங்களில் பட்டப் படிப்பு, பட்ட மேற்படிப்பு பயிலும் பி. சி., எம். பி. சி., டி. என். சி. வகுப்புகளைச் சோ்ந்த மாணவா்களுக்கு ஆண்டுக்கு ரூ.2 லட்சம் வரை கல்வி உதவித் தொகை வழங்கப்படும். மேற்படி 2026-27-ஆம் கல்வியாண்டில் புதியது, புதுப்பித்தல் கல்வி உதவித் தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான மாணவா்கள் மாவட்ட ஆட்சியரகத்தில் பிற்படுத்தப்பட்டோா் சிறுபான்மையினா் நல அலுவலகத்தை அணுகியோ இணையதளத்தில் இருந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து புதுப்பித்தல் விண்ணப்பங்களை அக். 31-க்குள், புதிய விண்ணப்பங்களை நவ.30-க்குள் அனுப்பப்பட வேண்டும். பருவத் தோ்வுக் கட்டண ரசீதுகளை 15.1.2027-க்குள் அனுப்ப வேண்டும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.