Weather and environment · 1 outlet covered this

உண்டியல் திறந்ததும் குவிந்த காணிக்கை... திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் ரூ.93.28 லட்சம் ரொக்கம் வசூல்

How outlets told it

News18 Tamil652d ago

உண்டியல் திறந்ததும் குவிந்த காணிக்கை... திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் ரூ.93.28 லட்சம் ரொக்கம் வசூல்

Read at News18 Tamil
உண்டியல் திறந்ததும் குவிந்த காணிக்கை... திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் ரூ.93.28 லட்சம் ரொக்கம் வசூல்
Photo: News18 Tamil

Trending:சற்றுமுன்Disco With KSDid You KnowOTT SpotDecodeShort NewsI3 With KSFollow UsfacebooktwitterinstagramyoutubeReported by:YuvathikaPublished by:pradeepa mLast Updated:Sep 11, 2026 5:49 PM ISTமதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் 147 கிராம் தங்கம் மற்றும் 2 கிலோ 775 கிராம் வெள்ளி காணிக்கையாகக் கிடைத்துள்ளன. 1/5மதுரையின் முக்கியமான ஆன்மிகத் தலங்களில் ஒன்றாக திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் விளங்கி வருகிறது. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படைவீடாக கருதப்படும் இக்கோயிலுக்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.2/5கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது வேண்டுதல்களுக்காகவும், நேர்த்திக்கடனாகவும் உண்டியல்களில் பணம், தங்கம், வெள்ளி உள்ளிட்ட பல்வேறு காணிக்கைகளை செலுத்தி வருகின்றனர். இந்த காணிக்கைகள் குறிப்பிட்ட கால இடைவெளியில் கோயில் நிர்வாகம் சார்பில் எண்ணப்பட்டு கணக்கிடப்பட்டு வருகிறது.3/5அந்த வகையில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில், பக்தர்கள் செலுத்திய ரொக்கக் காணிக்கையாக ரூ.93 லட்சத்து 28 ஆயிரத்து 985 கிடைத்துள்ளது. உண்டியல்களில் இருந்த பணம் முழுமையாக எண்ணப்பட்டு கணக்கிடப்பட்டது.4/5இதனுடன் 147 கிராம் தங்கமும், 2 கிலோ 775 கிராம் வெள்ளியும் காணிக்கையாக கிடைத்துள்ளன. பணம் மட்டுமின்றி தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்களும் உண்டியல் மூலம் காணிக்கையாக செலுத்தப்பட்டிருப்பது கணக்கில் தெரியவந்துள்ளது.5/5திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் உண்டியல் எண்ணிக்கையில் கிடைத்த காணிக்கைகள் கோயில் நிர்வாகத்தின் கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளன. இதில் ரூ.93 லட்சத்து 28 ஆயிரத்து 985 ரொக்கம், 147 கிராம் தங்கம் மற்றும் 2 கிலோ 775 கிராம் வெள்ளி இடம்பெற்றுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.