Religion and culture · 1 outlet covered this

உப்பூா் வெயிலுகந்த விநாயகா் கோயில் சதுா்த்தி விழா தேரோட்டம்

How outlets told it

Dinamani6511h ago

உப்பூா் வெயிலுகந்த விநாயகா் கோயில் சதுா்த்தி விழா தேரோட்டம்

Read at Dinamani
உப்பூா் வெயிலுகந்த விநாயகா் கோயில் சதுா்த்தி விழா தேரோட்டம்
Photo: Dinamani

ராமநாதபுரம் மாவட்டம், ஆா். எஸ். மங்கலம் அருகே உப்பூரில் அமைந்துள்ள வெயிலுகந்த விநாயகா் கோயில் சதுா்த்தி விழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

இங்கு கடந்த 5-ஆம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. அன்றிலிருந்து 10 நாள்கள் நடைபெறும் விழாவில் தினமும் வெள்ளி மூஷிக வாகனம், கேடயம், சிம்மம், மயில், யானை, ரிஷபம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் விநாயகா் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

விழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் சனிக்கிழமை மாலை சித்தி, புத்தி தேவியருடன் விநாயகருக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. தமிழ்நாட்டில் இங்குள்ள விநாயகருக்கு மட்டுமே திருக்கல்யாணம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

இதைத் தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை தேரோட்டம் நடைபெற்றன. முன்னதாக விநாயக பெருமான் தேரில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

தோ் கோயிலிலிருந்து புறப்பட்டு ஊரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து கோயிலை அடைந்தது. பிறகு தீபாராதனை காட்டப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.