Politics · 2 outlets covered this

உலக நலனுக்கான ஆக்கப்பூர்வமான பேச்சு; பிரிக்ஸ் மாநாட்டில் நடக்கும் என பிரதமர் மோடி உறுதி

How outlets told it

Dinamalar653d ago

உலக நலனுக்கான ஆக்கப்பூர்வமான பேச்சு; பிரிக்ஸ் மாநாட்டில் நடக்கும் என பிரதமர் மோடி உறுதி

Read at Dinamalar
Daily Thanthi993d ago

‘பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் சர்வதேச நலன் குறித்து ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைகள் நடைபெறும்’ - பிரதமர் மோடி

Read at Daily Thanthi
உலக நலனுக்கான ஆக்கப்பூர்வமான பேச்சு; பிரிக்ஸ் மாநாட்டில் நடக்கும் என பிரதமர் மோடி உறுதி
Photo: Dinamalar

/செய்திகள்/இந்தியா/ உலக நலனுக்கான ஆக்கப்பூர்வமான பேச்சு; பிரிக்ஸ் மாநாட்டில் நடக்கும் என பிரதமர் மோடி உறுதிADDED : செப் 11, 2026 08:55 AM ADDED : செப் 11, 2026 08:55 AM அ நிறம் | அளவுபுதுடில்லி: உலக நலனுக்கான ஆக்கப்பூர்வமான பேச்சு பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் நடைபெறும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்ரிக்கா உள்ளிட்ட ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ள பிரிக்ஸ் அமைப்பின் மாநாடு வரும் 12 மற்றும் 13 தேதிகளில் டில்லியில் பாரத் மண்டபத்தில் நடக்கிறது. இம்மாநாட்டிற்கு 4வது முறையாக இந்தியா தலைமை ஏற்கிறது. ரஷ்ய அதிபர் புடின், சீன அதிபர் ஷி ஜின்பிங், தென் ஆப்பிரிக்கா அதிபர் சிரில் ரமபோஸா, ஈரான் அதிபர் மசூத் பெஜெஷ்கியான், எகிப்து அதிபர் அப்தேல் பட்டா எல் சிசி, எத்தியோப்பியா பிரதமர் அபி அஹமது, இந்தோனேஷியா அதிபர் பிரபாவோ சுபியான்டோ, யுஏஇ சார்பில், அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் காலித் பின் முகமது பின் ஜயீத் அல்நஹ்யான், பிரேசில் வெளியுறவு அமைச்சர் மவுரோ வியிரா ஆகியோர் பங்கேற்கின்றனர். இந்நிலையில் இன்று (செப் 11) பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: டில்லியில் பிரிக்ஸ் உச்சிமாநாட்டிற்காக உலகம் முழுவதிலுமிருந்து தலைவர்கள் ஒன்றுகூடுவார்கள். உலக நலனை முன்னிறுத்தி, பல்வேறு விவகாரங்கள் குறித்து இம்மாநாட்டில் ஆக்கபூர்வமான விவாதங்கள் நடைபெறும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்'' என குறிப்பிட்டுள்ளார்.