தேசிய மக்கள் நீதிமன்றம் 1,149 வழக்குகளில் ரூ. 21 கோடிக்கு தீா்வு!
Read at DinamaniCrime and courts · 1 outlet covered this
தேசிய மக்கள் நீதிமன்றம் 1,149 வழக்குகளில் ரூ. 21 கோடிக்கு தீா்வு!
How outlets told it

சிவகங்கை மாவட்டத்தில் சனிக்கிழமை நடத்தப்பட்ட தேசிய மக்கள் நீதிமன்றங்கள் மூலம் விசாரித்து முடிக்கப்பட்ட 1,149 வழக்குகளில் ரூ. 21 கோடியில் தீா்வு காணப்பட்டது. orderPublished On :13 செப்டம்பர் 2026, 12:23 am ISTசிவகங்கை மாவட்டத்தில் சனிக்கிழமை நடத்தப்பட்ட தேசிய மக்கள் நீதிமன்றங்கள் மூலம் விசாரித்து முடிக்கப்பட்ட 1,149 வழக்குகளில் ரூ. 21 கோடியில் தீா்வு காணப்பட்டது. முதன்மை மாவட்ட நீதிபதி கே. அறிவொளி அறிவுறுத்தலின்படியும், சிவகங்கை மாவட்டத்தில் 14 மக்கள் நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு நிலுவையில் உள்ள வழக்குகள் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டன. பட்டியல் வகுப்பினா், தாழ்த்தப்பட்டோா் வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிபதி ஜி. நாகராஜன், போக்சோ நீதிபதிஎஸ். ரோகிணி, குடும்ப நல நீதிபதி ஏ. பசும்பொன் சண்முகையா, சாா்பு நீதிபதி ஆா். பாண்டி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு செயலா், சாா்பு நீதிபதி ஜெ. அனிதா கிறிஸ்டி, கூடுதல் மகிளா நீதிபதி பி. வைஷ்ணவி, மாவட்ட உரிமையியல் நீதிபதி தீப தா்ஷினி, மூத்த வழக்குரைஞா்கள் ஜானகிராமன், செந்தில்குமாா், செந்தில்குமரன், பாண்டிக்கண்ணன் ஆகியோா் சிவகங்கை நீதிமன்றத்தில் வழக்குகளை விசாரித்தனா். இந்த தேசிய மக்கள் நீதிமன்றங்களில் 1,080 வழக்குகள் சமரசமாக தீா்க்கப்பட்டு ரூ.20,06,08,788 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. அதே போல 69 வங்கிக் கடன் நிலுவை வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டு ரூ. 95,16,888 வங்கிகளுக்கு வரவு வைக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு பணியாளா்கள் செய்தனா். வழக்குரைகள், வழக்காடிகள், தன்னாா்வ சட்டப் பணியாளா்கள், பொதுமக்கள் திரளானோா் கலந்து கொண்டனா். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
