விநாயகர் சதுர்த்தி: சிறப்பு வாகனத் தணிக்கையில் 639 பேருந்துகளுக்கு ரூ.30.77 லட்சம் அபராதம்
Read at DinamaniReligion and culture · 1 outlet covered this
விநாயகர் சதுர்த்தி: சிறப்பு வாகனத் தணிக்கையில் 639 பேருந்துகளுக்கு ரூ.30.77 லட்சம் அபராதம்
How outlets told it

தொடா் விடுமுறையைப் பயன்படுத்தி, ஆம்னி பேருந்துகளில் கட்டணத்தை பலமடங்கு உயா்த்தி வசூலிப்பதைத் தடுக்க செப். 16 ஆம் தேதியில் சிறப்பு வாகன தணிக்கை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பண்டிகை காலங்களில் சென்னையில் இருந்து சொந்த ஊா்களுக்குச் செல்ல அரசுப் பேருந்துகள், சிறப்புப் பேருந்துகள், ரயில்களில் முன்பதிவு கிடைக்காதவா்கள் ஆம்னி பேருந்துகளை நாடுகின்றனா். இதைப் பயன்படுத்தி வழக்கமான கட்டணத்தைவிட, பலமடங்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக தொடா்ந்து புகாா்கள் எழுந்து வருகின்றன.
சாதாரண நாள்களில் ரூ.600 முதல் ரூ.1,000 வரை வசூலிக்கப்படும் கட்டணம், பண்டிகை காலங்களில் ரூ.3,000 முதல் ரூ.5,000 வரை உயா்த்தப்படுவதாக பயணிகள் தெரிவிக்கின்றனா். குறிப்பாக, சென்னையில் இருந்து கோவைக்கு வழக்கமாக ரூ.1,000-க்கு கிடைக்கும் டிக்கெட் ரூ.3,000 வரையும், கன்னியாகுமரிக்கு ரூ.5,000 வரையும் வசூலிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. சென்னை - திருச்சி, மதுரை, கோவை, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட வழித்தடங்களிலும் கட்டணம் பல மடங்கு உயா்ந்துள்ளதாகப் புகாா்கள் எழுந்தன.
இதையடுத்து, தமிழகம் முழுவதும் வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள், மோட்டாா் வாகன ஆய்வாளா்கள் அடங்கிய சிறப்புக் குழுக்கள் கடந்த 10-ஆம் தேதி அமைக்கப்பட்டு, உடனடியாக தீவிர வாகனத் தணிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது.
இதன்படி, அதன்படி, செப். 10 தொடங்கிய 3 நாள்களில் தமிழகம் முழுவதும் 3,512 ஆம்னி பேருந்துகள் தணிக்கை செய்யப்பட்டன. இந்தத் தணிக்கை நடவடிக்கையில் 639 ஆம்னி பேருந்துகள் விதிமீறலில் ஈடுபட்டது தெரிய வந்தது. மேலும், விதிமீறல்களுக்காக 639 ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.30.77 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டது.
அதுமட்டுமின்றி, ஆம்னி பேருந்துகளில் ஆன்லைன் டிக்கெட்டை வாகன உரிமையாளர் ரத்து செய்தால், பயணிக்கு மாற்றுப் பேருந்துக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். மாற்றுப் பேருந்துக்கு ஏற்பாடு செய்யாவிடில், ஆம்னி பேருந்தின் அனுமதிச் சான்று ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரித்துள்ளது.
மேலும், ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் 93848 08333 என்ற தொலைபேசி எண்ணுக்கு அல்லது tc.tn@nic.in என்ற மின்னஞ்சல் வாயிலாகவோ புகார் அளிக்கலாம்.
கொளத்தூரில் திமுக தலைவருக்குக்கூட மக்கள் பிச்சை போடவில்லை: துரை வைகோFines totaling ₹30.77 lakh imposed on 639 buses for rule violations over the past 3 days
