1 outlet covered this

பேராசிரியர் சாலமன் பாப்பையா காலமானார்!

How outlets told it

Dinamani653d ago

பேராசிரியர் சாலமன் பாப்பையா காலமானார்!

Read at Dinamani
பேராசிரியர் சாலமன் பாப்பையா காலமானார்!
Photo: Dinamani

தமிழறிஞர், பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா, உடல்நலக் குறைவால் மதுரையில் காலமனார். அவருக்கு வயது 90. உடல்நலக் குறைவால் சில நாள்களாக மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த சாலமன் பாப்பையா, சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். சுந்தரம் சாலமன் பாப்பையா என்ற இயற்பெயர் கொண்டவர். 1936ஆம் ஆண்டு பிப்ரவரி 22ஆம் தேதி பிறந்தார். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்த்துறை பேராசிரியராகப் பணியாற்றியவர் சாலமன் பாப்பையா. தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் பட்டிமன்றங்களில் நடுவராக அமர்ந்து நகைச்சுவை உணர்வுடன் ஆழமான கருத்துகளையும் வெளிப்படுத்தி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். திருக்குறள் உள்ளிட்ட பல்வேறு தமிழ் இலக்கியம் கொண்டாடிய நூல்களுக்கு, சாலமன் பாப்பையா உரை எழுதியிருக்கிறார். தமிழுக்கு அவர் ஆற்றிய தொண்டுக்காக 2000-ஆவது ஆண்டில் தமிழக அரசின் கலைமாமணி விருதினை பெற்றுள்ளார். 2021-ஆம் ஆண்டு மத்திய அரசின் பத்மஸ்ரீ விருதையும் பெற்றவர். பாய்ஸ், சிவாஜி உள்ளிட்ட ஒரு சில திரைப்படங்களிலும் சாலமன் பாப்பையா நடித்தார். சாலமன் பாப்பையா, மதுரை அரசகுடி ஞானஒளிவுபுரத்தில் குடும்பத்துடன் வாழ்ந்து வந்தார். இவரது மனைவி ஜெயபாய், ஆசிரியையாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவா். கடந்த 2025ஆம் ஆண்டு உடல்நலக் குறைவால் காலமானார். இவருக்கு தியாகமூா்த்தி என்ற மகனும், விமலா என்ற மகளும் உள்ளனா்.