Mutton Ghee Masala: நெய்யில் மணக்கும் மட்டன் மசாலா... சுவையான கிரேவி செய்யும் ஈஸி ரெசிபி
Read at News18 TamilLifestyle · 1 outlet covered this
Mutton Ghee Masala: நெய்யில் மணக்கும் மட்டன் மசாலா... சுவையான கிரேவி செய்யும் ஈஸி ரெசிபி
How outlets told it

Trending:சற்றுமுன்பட்ஜெட் தொடர்Disco With KSDid You KnowOTT SpotShort NewsI3 With KSFollow UsfacebooktwitterinstagramyoutubeReported by:YuvathikaPublished by:pradeepa mLast Updated:Sep 10, 2026 10:26 AM ISTமட்டன் விரும்பிகளுக்கு ஏற்ற, நெய் மணக்கும் மட்டன் மசாலா கிரேவி வீட்டிலேயே எளிதாக செய்வது எப்படி என்று இந்த தொகுப்பில் காணலாம். தேவையான பொருட்கள் மற்றும் செய்முறை விளக்கப்பட்டுள்ளது.1/5மட்டன் விரும்பிகளுக்கு எப்போதும் வித்தியாசமான சுவையில் செய்யப்படும் உணவுகள் மீது தனி ஆர்வம் இருக்கும். அந்த வகையில், அதிக பொருட்கள் இல்லாமல் நெய், மசாலா வாசனையுடன் எளிதாக செய்யக்கூடிய மட்டன் நெய் மசாலா கிரேவி வீட்டிலேயே தயார் செய்யலாம்.2/5இதற்கு தேவையான பொருட்கள் மட்டன் - 500 கிராம், நெய் - 100மிலி, மஞ்சள் தூள் - 1/4 மேசைக்கரண்டி, இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி, காய்ந்த மிளகாய் - 4, கறி மசாலா - 2 தேக்கரண்டி, தயிர் - 1 கப், கொத்தமல்லி இலைகள் தேவையான உப்பு ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.3/5முதலில் மட்டனை நன்றாக கழுவி எடுத்துக்கொள்ள வேண்டும். குக்கரில் சிறிதளவு நெய் சேர்த்து, அதில் மட்டனை போட்டு மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்க்க வேண்டும். பின்னர் குக்கரை மூடி 5 முதல் 6 விசில்கள் வரும் வரை வேகவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.4/5அடுத்ததாக ஒரு மிக்ஸி ஜாரில் காஷ்மீரி மிளகாய் மற்றும் கறி மசாலா தூள் சேர்த்து நன்றாக அரைத்து மசாலா பேஸ்டாக தயார் செய்து கொள்ள வேண்டும். கடாயில் சிறிதளவு நெய் ஊற்றி, அரைத்து வைத்துள்ள மசாலா பேஸ்ட்டை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். மசாலாவின் பச்சை வாசனை நீங்கி நெய்யுடன் நன்றாக கலந்ததும், குக்கரில் வேகவைத்த மட்டனையும் சேர்க்க வேண்டும்.5/5மட்டன் மற்றும் மசாலா நன்றாக ஒன்றாக சேரும் வகையில் வதக்கி, இறுதியாக சிறிதளவு மல்லி இலை தூவி கிளறி இறக்கினால் சுவையான மட்டன் நெய் மசாலா கிரேவி தயார். நெய்யின் மணத்துடன் மசாலா சுவையும் மட்டனின் சுவையும் சேர்ந்து இருப்பதால், சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிடும்போது சுவை மேலும் அதிகமாக இருக்கும்.
