வடகிழக்குப் பருவமழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு
Read at Daily ThanthiWeather and environment · 2 outlets covered this
வடகிழக்குப் பருவமழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு
How outlets told it
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை: தீயணைப்பு நிலையங்களில் ஆய்வு
Read at Dinamaniபுதுகை மாநகரில் குண்டும் குழியுமான சாலைகள் பருவமழைக்கு முன்பாக சீரமைக்கக் கோரிக்கை
Read at Dinamani
Published on: 12 Sep 2026, 12:31 pmசென்னை, வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, மணலி மற்றும் மாதவரம் மண்டலங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஜி. எஸ். சமீரன் இன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதுதொடர்பாக பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி. எஸ். சமீரன், இ. ஆ. ப., அவர்கள் இன்று (12.09.2026) வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, மணலி மற்றும் மாதவரம் மண்டலங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மாநகராட்சி ஆணையாளர் அவர்கள், வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மாதவரம் மண்டலம், வார்டு-24க்குட்பட்ட மாதவரம்-ரெட்ஹில்ஸ் சாலையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி மற்றும் புழல் உபரிநீர் கால்வாயில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணியினைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து, ஶ்ரீ பாலாஜி நகர் 3ஆவது பிரதான சாலைப் பகுதியில் அம்பத்தூர் மற்றும் கொரட்டூர் ஏரியில் இருந்து வரும் உபரி நீர் கால்வாய் சேரும் பகுதியினைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர், மணலி மண்டலம், வார்டு-18க்குட்பட்ட சி. பி. சி. எல். பாட்டில் பாலப் பகுதி மற்றும் ஆமுல்லாவயில் பாலப் பகுதியில் உள்ள புழல் உபரிநீர் கால்வாயினைப் பார்வையிட்டு ஆய்வு செய்து, ஆகாயத் தாமரைகள், செடிகள் மற்றும் தூவாரும் பணிகளை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வுகளின்போது, மாநகராட்சி, சென்னை குடிநீர் வாரியம், நீர்வளத்துறை, பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை உள்ளிட்ட சேவைத் துறைகளின் அலுவலர்கள் உடனிருந்தனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

