Sports · 1 outlet covered this

ஆசிய கோப்பை கிரிக்கெட்: வெற்றி கோப்பையை நக்வியிடம் இருந்து வாங்க மறுத்த இந்திய பெண்கள் அணி

How outlets told it

Daily Thanthi997h ago

ஆசிய கோப்பை கிரிக்கெட்: வெற்றி கோப்பையை நக்வியிடம் இருந்து வாங்க மறுத்த இந்திய பெண்கள் அணி

Read at Daily Thanthi
ஆசிய கோப்பை கிரிக்கெட்: வெற்றி கோப்பையை நக்வியிடம் இருந்து வாங்க மறுத்த இந்திய பெண்கள் அணி
Photo: Daily Thanthi

துபாய்

ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் வெற்றி பெற்ற இந்திய பெண்கள் அணி நக்வியிடம் இருந்து கோப்பையை வாங்க மறுத்தது.

10-வது பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் துபாயில் நடந்து வந்தன. இதன் இறுதி ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் இந்தியாவும், நடப்பு சாம்பியன் இலங்கையும் நேற்றிரவு விளையாடின. டாஸ் வென்ற இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் பேட்டிங் தேர்வு செய்ததும், அணியின் தொடக்க வீராங்கனைகள் ஸ்மிருதி மந்தனாவும், ஷபாலி வர்மாவும் விளையாட தொடங்கினர்.

36-வது அரைசதம்

ஷபாலியின் அதிரடியான பேட்டிங்கால் இந்தியா 10.2 ஓவர்களில் 100 ரன்களை தொட்டது. இதே ஓவரில் மந்தனா சிக்சர், பவுண்டரியுடன் 50 ரன்களை கடந்தார். அவருக்கு இது 36-வது அரைசதமாகும். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இந்திய அணி 5 விக்கெட்டுக்கு 183 ரன்கள் குவித்தது.

இதனால், 184 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் ஆடிய இலங்கை அணியில் கேப்டன் சமாரி அட்டப்பட்டு (36 ரன்), விஷ்மி குணரத்னே (20 ரன்) அடித்தனர். எனினும், அந்த அணி 20 ஓவர்களில் 111 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தது. இதன் மூலம் இந்தியா 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் கோப்பையையும் தட்டிச்சென்றது. இந்திய அணி 8-வது முறையாக ஆசிய கோப்பையை கைப்பற்றி உள்ளது.

பரிசு வழங்கும் நிகழ்ச்சி

போட்டி நிறைவடைந்த பின்னர் பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவர் மொஹ்சின் நக்வி கோப்பையை வழங்குவார் என கூறப்பட்டது.

ஆனால், இந்திய பெண்கள் அணி நக்வியிடம் இருந்து கோப்பையை ஏற்க மறுத்து விட்டனர். நக்வி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக இருப்பதுடன், அந்நாட்டின் உள்துறை மந்திரியாகவும் உள்ளார். கடந்த ஆண்டு ஆசிய கோப்பைக்கான போட்டியில் இந்திய ஆண்கள் அணி இதேபோன்று, நக்வியிடம் இருந்து கோப்பையை பெற மறுத்து விட்டனர்.

இலங்கை அணி

கோப்பை இல்லாமலே அவர்கள் வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால், இந்த முறை இந்திய பெண்கள் அணி களத்திற்கு கூட வரவில்லை. இதனால், சர்ச்சை ஏற்பட்டது. எனினும், இலங்கை அணிக்கு 2-வது இடத்திற்கான காசோலையை நக்வி வழங்கினார்.

இலங்கை கேப்டன் சமாரி அட்டப்பட்டுக்கு விருது வழங்கிய பின் உடனடியாக ஸ்டேடியத்தில் இருந்து நக்வி சென்று விட்டார். கடந்த ஆண்டை போலில்லாமல், இந்த முறை கோப்பையை கூட அவர் தன்னுடன் தூக்கி செல்லவில்லை.