Religion and culture · 1 outlet covered this

தில்லியில் 4 மாடிக் கட்டடம் திடீரென சாய்ந்தது: உடனடியாக இடிக்க அதிகாரிகள் உத்தரவு!

How outlets told it

Dinamani6526h ago

தில்லியில் 4 மாடிக் கட்டடம் திடீரென சாய்ந்தது: உடனடியாக இடிக்க அதிகாரிகள் உத்தரவு!

Read at Dinamani
தில்லியில் 4 மாடிக் கட்டடம் திடீரென சாய்ந்தது: உடனடியாக இடிக்க அதிகாரிகள் உத்தரவு!
Photo: Dinamani

தில்லி காந்தி நகர் பகுதியில் உள்ள 4 மாடிக் கட்டடம் ஒன்று திடீரென ஒரு பக்கமாக சாய்ந்த நிலையில், அந்தக் கட்டடத்தில் இருந்தவர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.

இந்த நிலையில், அந்தக் கட்டடத்தை அதன் உரிமையாளரே முன்வந்து இடித்து அகற்ற தில்லி மாநகராட்சி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இடிக்கும் பணியை உடனடியாக இன்றே மேற்கொள்ளவும் மாநகராட்சி நிர்வாகம் உரிமையாளரிடம் தெரிவித்துள்ளது. அவர் இடிக்கத் தவறினால், உரிய விதிகளின் கீழ் மாநகராட்சி நிர்வாகம் அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

காந்தி நகரின் ஷாத்ரா பகுதியில் உள்ள இக்கட்டடம் திடீரென சாய்ந்ததால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அதிலிருந்த மக்களை காலி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதில் காவல்துறையினர் மக்கள் கட்டடத்தின் அருகே செல்லாதவாறு சுற்றி வளைத்துத் தடுத்துள்ளனர். மாநகராட்சி அதிகாரிகளும் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து கட்டடத்தின் நிலைமையை ஆய்வு செய்தனர்.

அந்தப் பகுதியைச் சுற்றி வசிக்கும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த வாரம், தில்லியின் சாந்தி நிகேதன் பகுதியில் மாணவர் விடுதி செயல்பட்டு வந்த 5 மாடிக் கட்டடம் திடீரென இடிந்து விழுந்ததில், 7 பேர் பலியாகி பலரும் காயமடைந்தனர். இதனைத் தொடர்ந்து, அங்கு விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கட்டடங்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

Four-storey building in Delhi suddenly tilts; officials order immediate demolition

பிரிக்ஸ் உச்சி மாநாடு: தில்லியில் போக்குவரத்து கட்டுப்பாடுகள்!