ஸ்டுடியோக்களின் பிறப்பிடம்: கோடம்பாக்கம் உருவாக்கிய சினிமா உலகம்..!
Read at News18 TamilCinema and entertainment · 1 outlet covered this
ஸ்டுடியோக்களின் பிறப்பிடம்: கோடம்பாக்கம் உருவாக்கிய சினிமா உலகம்..!
How outlets told it

Trending:சற்றுமுன்Disco With KSDid You KnowOTT SpotDecodeShort NewsI3 With KSFollow Usfacebooktwitterinstagramyoutubeஸ்டுடியோக்களின் பிறப்பிடம்: கோடம்பாக்கம் உருவாக்கிய சினிமா உலகம்..!Reported by:Sundaravadivel EPublished by:Muthu KathanLast Updated:Sep 12, 2026 11:56 AM ISTபல துணைத் தொழில்கள் 4-5 கி. மீ. சுற்றளவில் உருவானது. லிபர்ட்டி, உதயம், கமலா போன்ற திரையரங்குகளும் சினிமா கலாச்சாரத்தை வளர்த்தன.1/5சினிமா வருவதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே கோடம்பாக்கத்துக்கு வரலாறு உள்ளது. புலியூர் நாட்டின் ஒரு பகுதியாக இருந்த இப்பகுதி, கார்கோடகன் வழிபட்டதாகக் கூறப்படும் புராணத்தின் அடிப்படையில் ‘கார்கோடகன் பாக்கம்’ என அழைக்கப்பட்டதாக ஒரு கருத்து உள்ளது. பின்னர் ஆற்காடு நவாபின் குதிரைத் தோட்டங்களால் ‘Ghoda Bagh’ என அழைக்கப்பட்டு, காலப்போக்கில் கோடம்பாக்கம் என மருவியதாகக் கூறப்படுகிறது. கிராமப்புறமாக இருந்த இப்பகுதி பின்னர் தமிழ் சினிமாவின் முக்கிய மையமாக மாறியது.2/5தமிழின் ஆரம்பகால பேசும் படங்களான ‘ஸ்ரீநிவாஸ கல்யாணம்’ போன்ற திரைப்படங்களின் படப்பிடிப்புகள் கீழ்ப்பாக்கம், மயிலாப்பூர் பகுதிகளில் நடைபெற்றன. 1930-களில் மின்சார ரயில் இணைப்பு கோடம்பாக்கத்தின் போக்குவரத்தை மேம்படுத்தியது. பின்னர் போர்க்காலச் சூழல், நகர நெரிசல், பெரிய செட்களுக்கான நிலத் தேவை ஆகியவை சினிமாவை கோடம்பாக்கம்–வடபழனி நோக்கி நகர்த்தின. 1940-களில் Star Combines உள்ளிட்ட பல ஸ்டுடியோக்கள் உருவாகின.3/5கோடம்பாக்கம்–வடபழனி பகுதியில் ஸ்டுடியோக்கள் குவிந்ததும், AVM, Vijaya-Vauhini, Gemini போன்ற நிறுவனங்கள் அதன் சினிமா அடையாளத்தை வலுப்படுத்தின. ஏ. வி. மெய்யப்ப செட்டியாரின் AVM தயாரிப்பு, படப்பிடிப்பு, ஆய்வகம் என பல வசதிகளை ஒருங்கிணைத்தது. பி. நாகி ரெட்டியின் Vijaya-Vauhini 13 ஷூட்டிங் தலங்களுடன் மிகப்பெரிய ஸ்டுடியோ வளாகங்களில் ஒன்றாக வளர்ந்தது. எஸ். எஸ். வாசனின் Gemini Studios ‘சந்திரலேகா’, ‘அவ்வையார்’ போன்ற படங்களால் புகழ்பெற்றது. இதைச் சுற்றி ஒரு முழுமையான Studio Cluster உருவானது.4/5ஸ்டுடியோக்களுடன் சினிமாவின் தொழில்நுட்ப உலகமும் கோடம்பாக்கத்தில் வேரூன்றியது. பிரசாத் லேப்ஸ் போன்ற நிறுவனங்கள் ஃபிலிம் புராசசிங், கலரிங், டப்பிங் உள்ளிட்ட பணிகளுக்கு முக்கிய மையங்களாகின. இளையராஜாவின் ஸ்டுடியோவும், இசைத் தயாரிப்புக்கு புதிய பரிமாணம் கொடுத்தன. மேக்கப், உடை, செட் பொருட்கள், கேமரா, லைட்டிங், எடிட்டிங், ஒலிப்பதிவு என பல துணைத் தொழில்கள் 4–5 கி. மீ. சுற்றளவில் உருவானது. லிபர்ட்டி, உதயம், கமலா போன்ற திரையரங்குகளும் சினிமா கலாச்சாரத்தை வளர்த்தன.5/5மெட்ராஸ் நகரம் தென்னிந்திய திரைப்படத் தயாரிப்பின் முக்கிய மையமாக உயர்ந்தபோது, கோடம்பாக்கமும் அதன் அடையாளமாக மாறியது. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடத் திரைப்படங்களுடனும் இப்பகுதி நெருக்கமான தொடர்பைக் கொண்டிருந்தது. ‘Kodambakkam’ மற்றும் ‘Hollywood’ இணைந்து உருவான ‘Kollywood’ என்ற பெயர் தமிழ் சினிமாவின் அடையாளமாகப் பிரபலமானது. படப்பிடிப்புகள் வெளிப்புற இடங்களுக்கு நகர்ந்த பின்னரும், தயாரிப்பு, டப்பிங், ஒலிப்பதிவு, படத்தொகுப்பு உள்ளிட்ட பணிகளின் முக்கிய மையமாக கோடம்பாக்கம் தொடர்கிறது.
