World · 1 outlet covered this

கொல்லப்பட்டதாகக் கூறப்பட்ட ஒசாமா மகன் விடியோவை வெளியிட்ட அல் கய்தா! 9/11 நினைவு நாளில்

How outlets told it

Dinamani652d ago

கொல்லப்பட்டதாகக் கூறப்பட்ட ஒசாமா மகன் விடியோவை வெளியிட்ட அல் கய்தா! 9/11 நினைவு நாளில்

Read at Dinamani
கொல்லப்பட்டதாகக் கூறப்பட்ட ஒசாமா மகன் விடியோவை வெளியிட்ட அல் கய்தா! 9/11 நினைவு நாளில்
Photo: Dinamani

அமெரிக்காவில் செப்.11 பயங்கரவாதத் தாக்குதலின் 25ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, அல்-கய்தா பயங்கரவாத அமைப்பு, ஒசாமா பின் லேடனின் மகன் ஹம்சா பின் லேனிடன் விடியோவை வெளியிட்டுள்ளது. அஸ்-சாஹேப் எனப்படும் அல் கய்தாவின் அதிகாரப்பூர்வ ஊடகத்தில், ஹம்சாவின் முதல் விடியோ வெளியிடப்பட்டுள்ளது. அதில், ஒசாமா பின் லேடனின் மகன், அடுத்த தலைவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. காரணம், 2019ஆம் ஆண்டு அமெரிக்கக் கூட்டுப் படைகள் இணைந்து ஆப்கன் - பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் நடத்திய தாக்குதலின்போது ஹம்சா கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருந்தது. சுமார் 50 வினாடிகள் ஓடும் அந்த விடியோவுக்கு செப்டம்பர் 11 தாக்குதல்களின் கால் நூற்றாண்டு என்று தலைப்பிடப்பட்டுள்ளது. அல் கய்தாவின்த லைவர் ஐமன் அல் சவாரியின் முகம் மறைக்கப்பட்ட புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளன. ஒரு மோசமான பின்னணியில் ஹம்சா அமர்ந்திருக்கிறார். விரிசல் விட்ட மண் சுவர், வெள்ளை டர்பன் தலையில், கையில் ஒரு துப்பாக்கியுடன் பேசுகிறார். இந்த விடியோவில் இருப்பது ஹம்சா தானா என்பதை உறுதி செய்ய அமெரிக்கா புலனாய்வுத் துறையினர் அடுத்தக்கட்ட நடவடிக்கை மற்றும் புலனாய்வு விசாரணைகளைத் தொடங்கியிருக்கிறார்கள்.